world

img

இலங்கையில் ஏப்ரல் மாத இறுதியில் பெட்ரோல், டீசல் முற்றிலும் தீரும் அபாயம்....

கொழும்பு
மோசமான அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையில் மீண்டும் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்துடன் அங்கு இருப்பில் உள்ள பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோகும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த மாத இறுதிக்குள் இலங்கையில் எரிபொருள் (மீண்டும்) தீர்ந்துவிடும் என்ற அச்சம் நிலவுவதால், இரு தரப்பு அதிகாரிகளும் கடன் வரியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடன்வரி அதிகரிக்கப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு கடுமையான நெருக்கடி நிலவும். இந்தியா இதுவரை 270,000 டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.