world

img

அமெரிக்காவில் வேலை குறைவு : பங்குச் சந்தையில் டாலர் மதிப்பு சரிவு

அமெரிக்காவில் வேலை குறைவு : பங்குச் சந்தையில் டாலர் மதிப்பு சரிவு

அமெரிக்கத் தொழிலாளர் துறை அமைச்சகம் ஆகஸ்ட் முதல் நாள் வெளியிட்ட வேளாண்மை சாரா துறைகளில் வேலைவாய்ப்புகள் தொடர்பான தரவுகள், சந்தையின் எதிர்பார்ப்பை விட குறைந்து காணப்பட்டதால், ஆகஸ்ட் முதல் நாள் அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தைகளும் அமெரிக்க டாலர் குறியீடும் பெருமளவில் சரிந்து காணப்பட்டது. மேலும் இந்த அறிக்கையில், கடந்த ஜுலை மாதத்தில் அமெரிக்காவின் வேலையின்மை விகிதம், கடந்த ஜுன் திங்களில் இருந்ததை விட 0.1புள்ளி அதிகரித்து 4.2விழுக்காடாக உயர்ந்து காணப்பட்டது. ஜுலை திங்களில் அந்நாட்டில் வேளாண்மை சாரா துறைகளில் புதிதாக 73ஆயிரம் வேலை வாய்ப்புகளை அதிகரித்தது. இது, சந்தை எதிர்பார்ப்பில் இருந்த ஒரு இலட்சத்து 10ஆயிரம் அளவை விட குறைவாக இருந்தது. அதேவேளையில், அமெரிக்காவில் கடந்த மே, ஜுன் ஆகிய மாதங்களில், வேளாண்மை சாரா துறைகளில் புதிதாக அதிகரித்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கைகள், முறையே ஒரு இலட்சத்து 44ஆயிரம் மற்றும் ஒரு இலட்சத்து 47ஆயிரத்திலிருந்து கணிசமாக குறைந்து, ஜுலை மாதத்தில் 19ஆயிரம் மற்றும் 14 ஆயிரமாக குறைந்துள்ளன. தவிர, தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் மீது அதிருப்தி அடைந்ததால், இவ்வமைச்சகத்தைச் சேர்ந்த தொழிலாளர் துறை புள்ளிவிவரப் பணியகத்தின் தலைவரின் வேலையை நீக்கம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகஸ்ட் முதல் நாள் உத்தரவிட்டுள்ளார்.