world

img

இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

இலங்கையில் இன்று மாலை 6 மணி திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவு வரும் கடும் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் மக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தவே தவித்து வருகின்றனர். இதன்காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். 

இந்நிலையில், இலங்கையில் கோத்தபய ராஜபட்சவை ஆட்சியிலிருந்து விலக வலியுறுத்தி, நாளை மிகப்பெரிய அளவில் மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து, இலங்கை முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணியும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.