world

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து,சாய்னா நேவால்,கிடாம்பி ஸ்ரீகாந்த்  

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, சாய்னா நேவால்,கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.  

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி பிலிப்பைன்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் சுற்றில் சீனத் தைபேயின் பாய் யு போவை 18-21, 27-25, 21-9 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.  

மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், தென் கொரியாவின் சிம் யுஜினை 21-15, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.  

இதையடுத்து, ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், 22-20, 21-15 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் டிசே யாங்கை தோற்கடித்தார். இதனால் மூவரும் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.