world

இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலால் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடான பாலஸ்தீனம்

காசா,டிச.13- பாலஸ்தீனம் பத்திரிகையாளர்களு க்கு மிகவும் ஆபத்தான நாடாக  மாற்றப்பட்டு விட்டது என  எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு கவலையை வெளிப்படுத்தி யுள்ளது.  

காசா மீது போர் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை துவங்கியதில் இருந்து பத்திரி கையாளர்களையும் அவர்களது குடும்பத்தி னரையும் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இதனை பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் பத்திரிகை யாளர்கள் உரிமை மன்றங்களும் கண்டித் துள்ளன.

எனினும் இஸ்ரேல் ராணுவம் தொ டர்ந்து பத்திரிகையாளர்களையும் அவர்க ளது குடும்பத்தினரையும் படுகொலை செய்வது தொடர்கிறது. இந்நிலையில் கடந்த டிச 11 அன்று, அல்-அக்ஸா வானொலி தொகுப்பாளரும், பாலஸ்தீன பத்திரிகையாளருமான எமான் சாந்தியின் வீட்டை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி யது.

இந்த தாக்குதலில் பத்திரிகையாளர் எமான் சாந்தி, அவரது மூன்று குழந்தை கள், கணவர் ஆகியோர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். காசா அரசு ஊடக அலுவலகம்  இந்த படு கொலையை உறுதிப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலை துவங்கியதில் இருந்து சுமார்193 பத்திரிகை யாளர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது.