காசா,செப்.3- காசாவில் 6 இஸ்ரேல் பணயக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹமாஸின் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவரான கலீல் அல்-ஹய்யா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து கடந்த சனிக்கிழமையன்று 6 பணயக் கைதிகளின் உடல்கள் எடுக்கப்பட்டதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளி யிட்டன. இதனைத் தொடர்ந்து பணயக்கைதி கள் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பத்தின் கூட்டமைப்பும், தொழிற் சங்கமும் இணைந்து இஸ்ரேலில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தன. அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் உட்பட பல நகரங்களில் லட்சக்கணக்கான இஸ்ரே லியர்கள் திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
மீதமுள்ள பணயக்கைதிகளை உயிரு டன் மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்த அவர்கள், போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளனர். மேலும் பிரதமர் நேதன்யாகு போர் நிறுத்தத்தை மேற்கொண்டு, பணயக்கைதி கள் பறிமாற்றத்தை செய்திருந்தால், அவர்கள் கொலையாகி இருக்க மாட்டார் கள். இந்த கொலைக்கு நேதன்யாகு அரசாங்கமே பொறுப்பு. அவர் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என இஸ்ரே லியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா, இஸ்ரேலின் மிருகத்தன மான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளே இந்த கொலைக ளுக்கு காரணம் என கூறியுள்ளார். மேலும் போர் துவங்கியதில் இருந்து இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுபோல பல பணயக் கைதிகள் கொலையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் துவங்கிய 2023 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தை மூலமாக ஹமாஸ் தரப்பில் இருந்து 115 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் சமீபத்திய பேச்சுவார்த்தை களில் கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. பணயக் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக முன் மொழியப்பட்ட சில புதிய ஆலோச னைகளையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது என்பதையும் அல்-ஹய்யா போட்டு டைத்துள்ளார்.
அதாவது அமெரிக்காவும் பல முறை பேச்சுவார்த்தைகளைத் தடுத்ததாகவும், இஸ்ரேல் தனது நிபந்தனைகளை மீண்டும் மீண்டும் மாற்றியமைத்ததாகவும், இது போன்ற செயல்கள் போர் நிறுத்த உடன் படிக்கையை நோக்கி முன்னேறுவதை கடின மாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.
இந்நிலையில் திங்களன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நேதன்யாகு பணயக் கைதிகளை உயிருடன் மீட்காததற்காக அவர்களது குடும்பத்தின ரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.