இஸ்லாமாபாத், நவ.27- பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தொண்டர்களுக்கும் அந்நாட்டு காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி வகித்த போது கிடைத்த பரிசுப்பொருட் களை அரசு கஜானாவில் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக அவர்மீதும் அவர் மனைவி புர்ஷா பீவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆயினும் இரு வரும் எளிதில் ஜாமீனில் விடுதலையாகி வந்து விடக் கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் தோஷாகானா வழக்கில் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் மற்றொரு வழக்கை காரணம் காட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 அன்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டத் தில் ஈடுபட வேண்டும் என நவம்பர் 13 அன்றே இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.
பாக் ராணுவமும், காவல்துறையும் பொதுமக்களை கார ணமின்றி கைது செய்தல், 26 ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றம் உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந் தது. இதனை தொடர்ந்து இம்ரானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஞாயிறன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் நோக்கி பேரணி சென்றனர்.
அவர்களை காவல்துறையும் ராணுவமும் தடுத்து நிறுத்த முயற்சித்தது. நகருக்குள் செல்லும் பாதையை பெரிய கண்டெய் னர்களை வைத்து அடைத்ததுடன் நகரின் எல்லையைச் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஆனாலும் தடைகளை மீறி போராட்டக்காரர் கள் நகரை நோக்கி முன்னேறியபோது காவல் துறைக்கும், இம்ரான்கான் கட்சியினருக்கும் மோதல் வெடித்தது.
இதில் பல காவலர்களை இம் ரான் கட்சியினர் சிறைபிடித்தனர்.இந்த சம்பவத் தால் செவ்வாய்க்கிழமை வரை 4 காவலர்கள் பலி யாகி இருந்த நிலையில் புதனன்று இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. 70 காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதே நேரத்தில் காவல்துறை தாக்குதலில் சுமார் 3500 தொண் டர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் கலவரம் பரவி விடக்கூடாது என இஸ்லாமாபாத்தில் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போ தைய பதற்றமான சூழலில் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை, குழந்தைகளின் கல்வி என பாகிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.