world

பாகிஸ்தானில் குழந்தைத் தொழிலாளர் முறையின் ‘நவீன அடிமைத்தனம்’

பாகிஸ்தானில் குழந்தைத் தொழிலாளர் முறையின் ‘நவீன அடிமைத்தனம்’

இஸ்லாமாபாத்,அக்.13- பாகிஸ்தானில் நிலவும் வறுமையின் காரண மாக லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)  2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 25.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தா னில் நான்கில் ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி க்குச் செல்லாமல் தொழிலாளியாக வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. இவர்களில் பெரும்பா லானோர் 10 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகள் என தெரிவித்திருந்தது. இது மிக மோசமான நிலையாகும். கொடூரமான தண்டனைகள் பல குழந்தைகள் தங்கள் தாயுடன் வீட்டு வேலைகளுக்குச் செல்கின்றனர். இப்படி செல்லும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு 1,340 ரூபாய் ஊதியமாகக்  கொடுக்கப்படுகிறது. இது அந்நாட்டின் அடிப்படை ஊதியமாக அரசு நிர்ண யித்துள்ள 40,000 ரூபாயுடன் ஒப்பிடும் போது மலைக் கும் மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது. இதுபோன்ற ஊதியம் குறைவாகக் கொடுக் கப்பட்டு மோசமாக வேலை வாங்கப்படும் குழந்தை கள் மீது வன்முறையும் திணிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ராவல்பிண்டி நகரில் பணக்கா ரக் குடும்பத்தின் சமையலறையில் இருந்து சாக்லேட் காணாமல் போனதற்காக அவ்வீட்டில் குழந்தைத் தொழிலாளியாக பணியாற்றிய 13 வயது பெண்குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  அந்நாட்டின் சிந்து மாகாணத்தில், குழந்தைக ளை வீட்டு வேலைக்கு அமர்த்தினால் அதிகபட்ச மாக ஓர் ஆண்டு சிறை அல்லது ரூ.50,000 அப ராதம் விதிக்கச் சட்டம் உள்ளது. ஆனால் சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். சிலர் மட்டுமே இந்த குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக உள் ளார்கள் எனவும் கூறப்படுகிறது.  சட்டங்கள் உண்டு  நீதியில்லை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் கூட நீதிமன்றங் கள் குழந்தைத் தொழிலாளியை பணியமர்த்திய வர்களுக்கு சிறிய அபராதம் மட்டுமே விதிக்கின்றது.  கராச்சி நகரில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த 13 வயது சிறுமியை அவரது முதலாளியும் மனைவியும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தினர். இந்த கொடுமையைச் செய்து காயப்படுத்திய தம்பதிக்கு நீதிமன்றம் வெறும் 9,000 ரூபாயை பிணைத் தொகையாக கட்டச் சொல்லி அவர்களை விடுவித்து விட்டது.  சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகம் கடன் பெற்று பாகிஸ்தான் திவாலான நிலையில், குழந் தைத் தொழிலாளர் முறை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. எனினும் மத அடிப்படைவாதம் மற்றும் வலுவற்ற சட்டங்களின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதியோ நிவாரணமோ இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் ஸ்பார்க் (sparc)  எனும் குழந்தை கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த காஷிஃப் மிர்சா, இந்தப் பிரச்சனைகள் குறித்து பேசிய போது “பாகிஸ் தான் சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன அடிமைத்த னத்தின் ஒரு வடிவமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.