எடப்பாடி பழனிசாமி பதவி வெறியில் விஜய்க்காக காத்திருக்கிறார்
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடல்
புதுக்கோட்டை, அக்.13 - விஜய் தனது நிலைப்பாட்டை அறி விப்பதற்கு முன்பாகவே, ஆசை வெட்கம் அறியாது என்பது போல் பதவி வெறி யில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடு மையாக சாடினார். புதுக்கோட்டையில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் பேசியிருக்கும் கருத்து ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. பெண் களை இழிவுபடுத்துவதை ஏற்க முடி யாது. எடப்பாடி பழனிசாமி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை குறித்து மூன்றாவது நீதிபதியின் கருத்தை ஏற்க முடியாது. காலம் காலமாக சிக்கந்தர் மலையில் ஆடு, கோழி பலியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு மேல்முறை யீடு செய்ய வேண்டும். கரூர் துயரம் குறித்து உச்சநீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் நீதிபதிகள் கருத்து சொல்லியிருப்பதை ஏற்க முடி யாது. 41 பேர் இறந்த கரூர் சம்பவத்தில் தவெக தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். விக்கிரவாண்டி முதல் கரூர் வரை, விஜய் சென்ற இடமெல்லாம் அசம்பாவி தங்கள் நடந்துள்ளன. ஆறுதல் தெரி விப்பதைக்கூட பெரிய நிகழ்வாக மாற்றி அரசியல் செய்வதை ஏற்க முடியாது. பாஜகவும் அதிமுகவும் கரூர் சம்ப வத்தைப் பயன்படுத்தி, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கின்றன. அதிமுக கூட்டத்தில் தவெக கொடியைப் பிடிக்கிறார்கள். இதுகுறித்து விஜய்யோ, தவெகவினரோ இதுவரை எதுவும் பேச வில்லை. கும்பமேளாவில் நூற்றுக்கணக்கா னோர் இறந்தபோது எந்தக்குழுவும் அமைக்காத பாஜக, கரூர் சம்பவத் திற்கு உடனடியாக விசாரணைக் குழு அமைத்திருக்கிறது. எப்படியாவது தவெக-வை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயல்கிறது. எத்தகைய கூட்டணியையும் எதிர்கொள்ள திமுக தலைமையிலான அணி தயாராக இருக்கிறது. திமுக அரசின் நலத்திட்டங் களும், வலுவான கூட்டணியும் சேர்ந்து 2026-இல் மகத்தான வெற்றி யைப் பெறுவோம். கந்தர்வகோட்டை சிப்காட் கந்தர்வகோட்டை தொகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்ப டும் என்று அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. உடனடியாக பணிகள் தொடங்கப்பட வேண்டும். கந்தர்வகோட்டை அருகே தனியார் உயிரி மருந்து கழிவு சுத்திகரிப்பு தொழிற் சாலை அமைப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 2026 தேர்தலை சந்திப்பதற்கு முன், 2021 தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப் பாக போக்குவரத்துத் தொழிலாளர் களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, எம்எல்ஏ எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.