வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்
சென்னை, அக்.13 - வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராக அரசியல், பொருளாதாரத் தளங்களிலும், குறிப்பாக பண்பாட்டுத் தளத்திலும் இடதுசாரிகள் தீவிர மாகப் பணியாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறினார். சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற பி.கே.என்.பணிக்கர் ஆகியோருக்கு ஞாயிறன்று (அக்.12) சென்னை கேரளா சமாஜம் வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மதராஸ் கேரள சமாஜம் இந்நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வில் காந்தி மற்றும் கிராம்சி வாழ்வியலை மையமாக வைத்து பி.எம்.கிரீஷ் எழுதி, பி.கே.என்.பணிக்கர் மொழியாக்கம் செய்த நூலை எம்.ஏ.பேபி வெளியிட டாக்டர் ஏ.சி.சுகாசினி பெற்றுக் கொண்டார். அப்போது, எம்.ஏ.பேபி பேசியதாவது: மெட்ராஸ் கேரள சமாஜத்தின் தலைவராக வும், கேரள சமாஜம் பள்ளியின் தாளாளராகவும் செயல்பட்ட வேதியியல் விஞ்ஞானியும் 40-க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவருமான 90 வயது நிரம்பிய பி.கே.என். பணிக்கர் “கேரள சாகித் திய அகாடமி” விருது பெற்றதை பாராட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி, அறிவியல், இலக்கியம் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பன்முகத்தன்மை வாய்ந்த பணிகளில் பி.கே.என்.பணிக்கர் செயல்பாடுகளுக்கு எம்.ஏ. பேபி புகழாரம் சூட்டினார். புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததன் வாயிலாக மலையாளக் கவிதை களை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் பணிக்கர் என பேபி குறிப்பிட்டார். வேதியியல் விஞ்ஞானியாக உள்ள பணிக்கர், உலகத்தில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதைகளை மலையாளத்தில் நூலாகக் கொண்டு வந்து, மலையாளக் குழந்தை இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை வலது சாரிகள் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கும் காலத் தில், விவேகானந்தர் குறித்து நூல் ஒன்றை பணிக்கர் எழுதியிருப்பதை பேபி பாராட்டினார். உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்டதற்கு தனது கடும் கண்டனங்களை தெரி வித்த பேபி, வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராக அரசியல், பொருளாதாரத் தளங்களிலும் குறிப்பாக பண்பாட்டுத் தளத்திலும் இடதுசாரிகளும் எழுத்தாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டினார். சமாஜத்தின் தலைவர் எம்.சிவதாசன்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் டி.ஆனந்தன் வரவேற்றார். டாக்டர் கே.ஜெ.அஜயகுமார் விருந்தினர்களை அறிமுகம் செய்தார். ஆசான் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சி.கே.ரவி, பேரா.பி.எம்.கிரீஷ், எப்ஏஐஎம்ஏ தேசிய செயல் தலைவர் கே.வி.வி.மோ கன், சிடிஎம்ஏ பொதுச் செயலாளர் எம்.பி.அன்வர், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எம்எம்ஏ பொதுச் செயலாளர் பி.பி. அப்துல் ரஷீத், ஏஐஎம்ஏ தமிழ்நாடு பிரிவுச் செயலா ளர் ராஜன்சாமுவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர் பி.கே.என்.பணிக்கர் ஏற்புரை யாற்றினார். கேரள வித்யாலயம் கல்வி அறக் கட்டளை செயலாளர் ஆர்.கே.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.