‘பாஜக நாடகத்தின் நடிகர் விஜய்’
சென்னை: நடிகர் விஜய் பாஜக நாடகத் தில் நடிக்கும் அரசியல் நடிகர் என விசிக எம்.பி. ரவிக்குமார் விமர் சித்துள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால் தான் என தெரிவித்த அவர், திமுகவுக்கு செல்லும் சிறுபான்மை யினரின் வாக்குகளை பிரித்து மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டில் அதிகாரத்தை பிடிப்பதே பாஜகவின் திட்டம் என குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறுவதும், காங்கிர ஸுடன் நெருக்கம் காட்டுவதும் சிறு பான்மையினரிடம் குழப்பம் ஏற்படுத்தும் தந்திரம் என்றும், பாஜக அணியில் விஜய்யை சேர்க்காமல் தனித்து நிறுத்தி தேர்தலுக்குப் பிறகு ஆதரவு பெறவே திட்டமிடுவதாகவும் ரவிக்குமார் தெரி வித்துள்ளார்.