அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடி, அக்.13 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 7 ஆவது மாநாடு தூத்துக்குடியில் அக்.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் மாநிலச் செயலாளர் டெய்சி தொகுப்புரை வழங்கினார். மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி, சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவ ராக இ.பாக்கியமேரி, மாநிலச் செயலாளராக எஸ்.தேவமணி, பொருளாளராக கே.சித்ரா, துணைத் தலைவர்களாக சரஸ்வதி, மணி மேகலை, தவமணி, நாகலட்சுமி, அமிர்தபள்ளி, அனிதா, ருக்மணி, பிரேமா ஆகியோரும், துணைச் செயலாளர்களாக லில்லி புஷ்பம், மலர், வரதலட்சுமி, சந்திரா, ராணி, சாந்தி, இந்திரா, நிர்மலா உட்பட 23 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிர்வாகிகளை அறிமுகம் செய்து அங்கன் வாடி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் சிந்து நிறைவுரையாற்றி னார். வரவேற்புக் குழு செயலாளர் சந்திரா நன்றி கூறினார்.