world

img

நேபாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நேபாள அரசு, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இரண்டாம் நாளாகவும் தீவிரமடைந்த நிலையில், நேபாள அரசு சமூக வலைத்தள தடையை நீக்கியது. இருந்தபோதிலும் போராட்டக்காரர்கள் அமைதியாகாமல், பிரதமர் இல்லம், அமைச்சர்கள் வீடுகள், ஆளுங்கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடம் மீதும் தீவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதன் பின்னர், இரண்டு அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், இறுதியாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.