மியான்மர்.மார்ச்.28- மியான்மரில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்
மியான்மர் நாட்டில் 6.4 மற்றும் 7.7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இரண்டு முறை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் அதிகமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடுகளான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும், சீனாவிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.