world

img

ஐ.நா. அமைதிப்படைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

பெய்ரூட், அக். 14 - லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் 900 இந்திய ராணுவ வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், வீரர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு நட வடிக்கை எடுப்பதற்குப் பதில், இஸ்ரேலுடன் கைகோர்த்து நரேந்திர மோடி அரசு அப்பட்டமான துரோகத்தை இழைத்துள்ளது.

ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப் படைகள் முகாமின் பிரதான வாயிலை ஞாயிற்றுக்கிழ மையன்று இஸ்ரேல் ராணுவம் டாங்கி கள் கொண்டு அழித்ததாக லெபனா னில் உள்ள ஐ.நா. இடைக்காலப் படை (UNIFIL) தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா. படைகள் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும் அது கூறியுள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட ஐ.நா.  அமைதிப் படையினர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஐ.நா. இடைக் காலப் படை கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலின் அடாவடி

“ஐ.நா. நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 (2006) ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயல்” என வும் லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப்  படைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 
லெபனானில், சர்வதேச சட்டத்தை மீறி ஐ.நா. அமைதிப் படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யதை கண்டித்தும், அத்தகைய தாக்கு தல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனானில் ஐ.நா. இடைக்காலப் படையில் பங்கு பெற்றுள்ள நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

சீனா உட்பட 34 நாடுகள் கண்டன கூட்டறிக்கை

குறிப்பாக, சீனா, பிரான்ஸ், அர்மீனியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகள் இணைந்து கையொப்ப மிட்டு, இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஆனால், ஐ.நா. அமைதிப் படையில் இந்திய ராணுவ  வீரர்கள் 900 பேர் வரை பணியாற்றும் நிலையில், இந்திய அரசு கையெழுத்திடவில்லை.

மோடி அரசின்  அப்பட்டமான துரோகம்

பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் இந்த தாக்கு தலை கண்டித்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காமல் தவிர்த்திருப்பதன் மூலம், இந்திய வீரர்களை பாஜக அரசு கைவிட்டு விட்டதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு நடை முறையில் இந்தியா தரும் ஆதரவு இது எனவும், எல்லை கடந்து ஐ.நா. பாதுகாப்பு படையில் பணியாற்றும் இந்திய வீரர்களுக்கு செய்த துரோகம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்னல் காலேவின் மரணத்திலும் அலட்சியம்

காசாவில் ஐ.நா. படையில் பணி யாற்றி வந்த இந்தியாவின் ராணுவ வீரர் கர்னல் வைபவ் அனில் காலே, 5 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப் பட்டார். சர்தேச சட்டத்தை மீறிய இப்போர்க்குற்றத்திற்காக இந்திய பிரதமர் மோடி, அப்போதும் இஸ்ரேல் அரசுக்கு எந்த கண்டனத்தையும் தெரி விக்க வில்லை. இந்திய வீரரை படு கொலை செய்ததற்காக இஸ்ரேல் ராணுவத்தின் மீது சர்வதேச நீதி மன்றத்தில் ஒரு வழக்குக் கூட பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.