world

img

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்: எதிர்கொள்ள ஹிஸ்புல்லா தயார்

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தினால் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம் பேசியுள்ளார்.

இஸ்ரேலால் எங்களுடைய ராணுவத்திறன்களை தாக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார். லெபனானை ஆக்கிரமிப்பது, லெபனான் மக்களை படுகொலை செய்வது என  இஸ்ரேல் குழப்பத்தை உருவாக்கினாலும் எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறுவோம் எனவும் கூறியுள்ளார்.