world

img

லெபனான் பெய்ரூட்டில் குண்டு மழை: தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை

லெபானான் மீது தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

லெபனானின் பெய்ரூட்டில் இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கோட்டையான தாஹியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே லெபனானின் தெற்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தரைவழித் தாக்குதலை தொடங்கியது. இந்தத் தாக்குதலின் போது லெபனானில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 27-ஆம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்ப்டை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதலில் ஈடுபட்டது.

ஈரானுக்கு தவறு செய்துவிட்டது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

பாலஸ்தீனம் – இஸ்ரேலுக்கு இடையேயான போர், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் என நாளுக்கு நாள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.