ஜப்பான் நாடாளுமன்ற கீழவையை கலைக்க அந்த நாட்டின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா புதன்கிழமை உத்தரவிட்டார்.
புதிய நாடாளுமன்றத்தைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமராக இருந்து வந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி கடந்த மாதம் தேர்ந்தெடுத்தது. அதையடுத்து, அவர் நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்றார்.
முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பிக்கள் பதவி விலகியதால் அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனவே, புதிதாக தேர்தல் நடத்தி பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஷிகெரு இஷிபா முடிவு செய்தார்.