கொரோனாவால் இத்தாலியில் உள்நாட்டுக்குள் பயணம் செய்ய விதித்த தடையை நீடிக்க, அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து இத்தாலி பிரதமர் பொது மக்களிடையே பேசும்போது,
இத்தாலியில் 20 மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை மார்ச் மாதம் 27 -ம் தேதிவரை நீடிக்கப்படுகிறது. உருமாற்றம் அடைந்த கொரோனா பரவாமல் இருக்க கட்டுப்பாடுகளை நீட்டிப்பது அவசியம் என்று கூறினார். ஆனால் இந்த கட்டுப்பாடுகள், வேலை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரெட் சோன் பகுதிகளில் நிலவும் கட்டுப்பாடுகள் அவ்வாறே தொடரும். என்று அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.