world

img

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் “முழு உடன்படிக்கைக்கு” தயார் - ஹமாஸ் அறிவிப்பு

காசா,மே 31- காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை  நிறுத்தினால்,முழுமை யான பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப் பந்தம்  உட்பட “முழு உடன்படிக்கையை” எட்டு வதற்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர்   அறிவித்துள்ளனர். பாலஸ்தீனர்கள் மீதான இனப்படு கொலை தாக்குதல்கள், நிலங்களை ஆக்கிரமிப்பது, கொலை செய்வது, மக் களை பட்டினியில் தள்ளுவது ஆகியவை தொடரும் போது  அமைதிப்  பேச்சுவார்த்தைகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இஸ்ரேல் முழுமையாக தாக்கு தலை நிறுத்தினால் நாங்கள் முழு உடன் படிக்கைக்கு தயார் என அமைதி பேச்சு வார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே  இந்த மாத துவக்கத்தில் இரண்டு நாட்கள் எகிப்து  மறைமுகப் பேச்சுவார்த்தை  நடத்தி யது. அந்தச் சூழலில் தான் எகிப்து - காசா  எல்லையான ரஃபா நகரத்தின் மீது இஸ் ரேல் தரைவழித்  தாக்குதலை  நடத்தியது. மேலும் ரஃபா பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.  இந்தச்  சூழலில் தான் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் முழு உடன்படிக்கைக்கு தயார் என தெரி வித்துள்ளது.