டெஹ்ரான், அக்.26- இஸ்ரேல் ராணுவம், சனிக்கிழமை அதி காலை ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஈரானின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் தடுத்து விட்டதால் அந்நாட்டிற்கு ஏற்பட இருந்த பெருமளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் மூன்று பிரிவு களாக ஏவுகணைகளை ஏவியது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப் பட்டுள்ள இடங்கள், ஏவுகணை மற்றும் டிரோன் தளங்கள், ராணுவத் தளங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 2 அதிகாரிகள் பலி இந்த தாக்குதல் அனைத்தையும் ஈரா னின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் வானிலேயே தடுத்து விட்டதாக தெரி வித்துள்ள ஈரான் நாட்டின் ‘பிரஸ் டிவி’, இஸ்ரேல் தாக்குதலில் 2 ராணுவ அதிகாரி கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வும், சில இடங்களில் சிறிது பாதிப்பு ஏற் பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும், வழக்கம் போல மக்கள் காலை நேர பணி களை அமைதியாக செய்து வருகின்ற னர் என்பதற்கான, ஈரான் நகரங்கள் இயல் பாக இருக்கும் என காணொளியையும் வெளியிட்டுள்ளது. ஈரான் எச்சரிக்கை அதே நேரத்தில், இஸ்ரேல் அத்துமீறி நடத்திய இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் வழித்தடங்களையும் அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும் வரை மூடு வதாக ஈரான் அறிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “ஈரான் மீது அதிகாலை துவங்கிய துல்லிய தாக்குதல்களை முடித்து விட்டோம்; நாங்கள் அவர்களின் ராணுவ நிலைகளைத் தாக்கியுள்ளோம். மீண்டும் ஈரான் தாக்கினால் நாங்கள் மீண்டும் தாக்குதலை துவங்குவோம்” என தெரிவித்துள்ளார். உலக நாடுகள் கண்டனம் “இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தோல்வியை தழுவி விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அதை மறைக்கவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்திய தாக்குதல் காணொளிகளை தற்போதைய நிகழ்வுகள் போல போலியாக பரப்பி வரு கிறது” என்று ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹமாஸ், ஓமன், பாகிஸ்தான், இராக், சவூதி அரே பியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரி வித்துள்ளன. இது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என மலேசியா கண்டித் துள்ளது. இஸ்ரேல் ஆதரவாளரான இங்கி லாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஈரான் பதில் தாக்குதல் நடத்தக் கூடாது என கூறி யுள்ளார். இஸ்ரேல் எதிர்க்கட்சித்தலைவர் யார் லபிட் மேலும் வலுவாக ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என போர் வெறி யுடன் பேசியுள்ளார்.