ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் போராட்டம் காரணமாக ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் எந்த விமானம் கிடைத்தாலும் அதனை பிடித்து இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; ஈரானில் உள்ள இந்தியர்கள், +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய அவசரகால உதவி எண்கள் மற்றும் cons.tehran@mea.gov.in என்ற இ-மெயில் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் https://www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
