இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 38 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த நிக்கல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் அதற்குள் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்த 13 பேரில் 7 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். 6 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாகத் தெரிய வராத நிலையில், தூய்மை பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.