world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்....

விரைவில் சந்திப்பு

மாஸ்கோ

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும்எதிர்வரும் ஜுன்மாதம் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த சந்திப்பை நடத்தலாம் என்று பைடன், இம்மாத துவக்கத்தில் புடினுடன் தொலைபேசி மூலம் பேசியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ் தெரிவித்தார். 

                             ******************

பூனைகளுக்கும்!

லண்டன்

மனிதனிடமிருந்து பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று, பிரிட்டனில் இரண்டு பூனைகளை சோதித்ததில் தெரிய வந்துள்ளது என கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். பூனைகளின் நுரையீரல்களில் பாதிப்புகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

                             ******************

போப் கண்டனம்

வாடிகன்

ஐரோப்பாவின் எல்லை களை அடைவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்த 130 புலம்பெயர் தொழிலாளர்கள் கடலில் மூழ்கி இறந்தது குறித்து ஆழ்ந்த துயரமும் கவலையும் வெளியிட்டிருக்கிறார் போப்பிரான்சிஸ். 2 நாட்களாக அவர்கள் ஐரோப்பிய அதிகாரிகளி டம் மனிதாபிமான உதவிகளை கேட்டார்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள போப், இது அவமானமான தருணம் என்றும் கண்டித்துள்ளார். 

                             ******************

மூன்று துண்டுகள்

ஜகார்த்தா

இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று பாலி கடலில் காணாமல் போனது. அது கடலில் மூழ்கி மூன்று துண்டுகளாக உடைந்துநொறுங்கியிருப்பது தற்போது கண்டறியப்பட்டது. அதிலிருந்த 53 மாலுமிகள்  பலியாகினர்.

                             ******************

100 கோடி டோஸ்

ஐ.நா.சபை

உலகம் முழுவதும் இதுவரை 100 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி, பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அதிக வருமானம்உள்ள பணக்கார நாடுகளின்மக்களுக்கே அதிகமாகதடுப்பூசி கிடைக்கப்பெற்றுள் ளது. உலக மக்கள்தொகையில் 16சதவீதம் பேர் பெரும் பணக்கார நாடுகளில் உள்ளனர். அவர்களில் 47 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரிய நிலையில் உள்ள மக்களுக்கு இதுவரை வெறும் 0.2சதவீதம் தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன.

                             ******************

15 லட்சம் பேர்

வாஷிங்டன்

முதலாம் உலகப்போரில் துருக்கியின் ஓட்டோமான் பேரரசால் கிட்டத்தட்ட15லட்சம் அர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை, மிகப்பெரிய படுகொலை என்றுமுதல் முறையாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த அறிவிப்பை அர்மீனிய மக்கள் வரவேற்றுள்ளனர். துருக்கி அரசு இதை நிரா கரித்துள்ளது. 

                             ******************

வன்முறை முடியும்

வாஷிங்டன்

ஆசியான் அமைப்பின் தலைவர்களும் மியான்மர் ராணுவ அரசின் தலைவரும் பங்கேற்ற முக்கியப்பேச்சுவார்த்தை இந்தோனேசி யாவில் நடைபெற்றது. இந்தப்பேச்சுவார்த்தையில், மியான்மரில் அனைத்து அரசியல்கட்சிகளுடனும் ஆக்கப்பூர்வ மான பேச்சுவார்த்தையை துவக்கவும், வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும், ராணுவ அரசு ஒப்புக்கொண்ட தாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.