world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி, நேதன்யாகுவிற்கு எச்சரிக்கை

இஸ்ரேல் ஐ.நா. முடிவால் தான் உருவாக்கப் பட்டது என்பதை பிரதமர் பெஞ்சமின் நே தன்யாகு மறந்து விடக்கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விமர்சித் துள்ளார். பாலஸ்தீனத்தை பிரிப்பது தொடர்பான ஐநா பொதுச் சபை தீர்மானத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். ஐ.நா.வின் முடிவுகளை புறக்கணிக்கும் நேரம் இதுவல்ல என்றும் எச்ச ரிக்கை விடுத்துள்ள அவர் அமைதிப்படை மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித் திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாலஸ்தீனத்துக்கு தொடர்  ஆதரவுக்குரல் தரும் வெனிசுலா

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வெனி சுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வருகிறார். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் நடத்துவதாக  சர்வ தேச ஊடகங்கள் கூறுகின்றன. அது உண்மை யல்ல,  இது பாலஸ்தீனத்தில், லெபனானில் உள்ள மக்களை அழிக்க அவர் முன்னெடுத்துள்ள போர். இன்னும் சொல்லப்போனால் இதை போர் என சொல்லக்கூடாது.  இது ஒரு இனப்படுகொலை என்று  நிக்கோலஸ் மதுரோ குறிப்பிட்டுள்ளார்

தாக்குதல் விரிவடைவதை  தவிர்க்க போர் நிறுத்தமே தீர்வு

லெபனானுக்குள் இஸ்ரேல் தாக்கு தல்களை அதிகரித்து வரும் வரை இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்கும் உரிமை இஸ்ரேல் எதிர்ப்பு குழு வுக்கு இருக்கிறது என ஹிஸ்புல்லா துணைப் பொதுச்செயலாளர் நைம் காசிம் தெரிவித்துள் ளார். அதிகரித்து வரும் இந்த தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை வளர்க்க  பேரிடர் மேலாண்மை அவசியம்

இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் தணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் அதிக முத லீடு செய்ய வேண்டும் என  ஐ.நா. உதவிச் செயலர் கமல் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை பேரி டர்களால் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகின்றது. குறிப்பாக ஆசிய பசிபிக் நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த பேரிடர் மேலாண்மைக்கு அதிக முதலீடுகளை செய்ய வேண்டும் என  பேரிடர் தணிப்பு மற்றும் தடுப்பு மாநாட்டில் பேசியுள்ளார்.

பொது விடுமுறைகளை நீக்கிய  வங்கதேச இடைக்கால அரசு

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சில பொது விடுமுறைகளை இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது. மார்ச் 17 அன்று கொண்டா டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ் மான் பிறந்தநாள் மற்றும் அவரது மனைவி, மகன் பிறந்தநாட்கள்  உட்பட எட்டு தேசிய விடு முறைகள் ரத்து செய்யப்படுவதாக வங்கதேசத் தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.