நியூயார்க், ஜன.31- பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பு (UNRWA) மீது இஸ்ரேல் தடை விதித்தி ருந்தாலும் அது தனது பணிகளை காசா மற்றும் மேற்கு கரையில் தொடரும் என ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித் துள்ளார். நிவாரண அமைப்பு ஹமாஸ் அமைப்பிற்கு உதவுகின்றது என பல நாட்களாக பிரச்சாரம் செய்து வந்த இஸ்ரேல் 2024 அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் பாலஸ்தீன அகதிக ளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பு செயல்படக் கூடாது என அந்நாட்டு நாடாளுமன்றம் தடை விதித்து இரண்டு சட்டங்களை நிறைவேற்றியது. மேலும் இஸ்ரேல் நாட்டின் அதிகாரிகள் அந்த அமைப்புடன் எந்தவொரு தொடர்பையும் மேற் கொள்ளக்கூடாது என்றும் தடையில் குறிப்பிட்டி ருந்தது. இந்தச் சட்டங்கள் ஜனவரி 30 வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அதன் சேவை களை தொடர்ந்து வழங்கும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரி வித்தார். இஸ்ரேலின் தடை காரணமாக கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா. தலைமையக கட்டிடம் பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லாமல் காலியாக இருந்தாலும் அவ்வமைப்பின் ஊழியர்கள் களத்தில் இருந்து பாலஸ்தீனர்களுக்கு உதவி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். ஐநா ஊழியர்கள் மருத்துவ மனைகள் அல்லது வேறு இடத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக பணிபுரிவதாகவும் அவர்கள் அனை வரிடமும் தொடர்பு கொண்டதாகவும் டுஜாரிக் தெரி வித்தார். கிழக்கு ஜெருசலேம் உட்பட இஸ்ரேலால் ஆக்கி ரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் எங்கள் மருத்துவமனைகள் திறந்தே தான் உள்ளன என்றும் அவர் கூறினார். அதேபோல காசா பகுதியிலும் எங்கள் நிவார ணப்பணிகள் நிற்கவில்லை சுகாதாரம், உணவு, குழந்தைகளுக்காக மன அழுத்தத்தை குறைப் பது என அனைத்துப் பணிகளையும் எங்கள் அமைப்பு தொடர்ந்து செய்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார். இஸ்ரேலின் தடைச் சட்டம் அமலான பிறகு நிவாரண அமைப்பின் ஊழியர்களுக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என செய்தி யாளர் ஒருவர் கேட்டதற்கு, பாலஸ்தீன அகதிக ளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பை ஒட்டு மொத் தமாக முடக்கும் வரை அது தன் பணிகளைத் தொட ரும் என்பதே உத்தரவு என்று டுஜாரிக் தெரிவித்தார்.