world

img

ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் : ரஷ்யா ஆதரவு

நியூயார்க்,அக்.21-  ஐ.நா. பாதுகாப்பு அவை யில் இந்தியா நிரந்தர உறுப்பி னராவதற்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.  1945 ஆம் ஆண்டு உரு வாக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு அவை உலக நாடுகளின் எதார்த்தத்தை பிரதிப லிக்காத, ஜனநாயகத்தை வலுப்படுத்தாத தன்மையுடன் உள்ளது என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக உள்ளது.  அமெரிக்காவின் ஆதிக் கத்தின் காரணமாக கம்யூ னிஸ்டுகள் ஆளக்கூடிய நாடு கள், வளரும் நாடுகள், அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளின் மீது ஒருதலை பட்ச மான நடவடிக்கைகள்  மட்டுமே இந்த பாதுகாப்பு அவையில் அதிகம் எடுக்கப்படுகிறது.  இதனால் பாதுகாப்பு அவை யில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும். குறிப் பாக வளரும் நாடுகளின் குர லையும், பன்முகத்தன்மை யையும் பிரதிபலிக்கின்ற வகையிலும் இந்த மாற்றங் கள் அமைய வேண்டும் என இந்தியா, சீனா, ரஷ்யா உள் ளிட்ட நாடுகள் தொடர்ந்து குர லெழுப்பி வருகின்றன. தற்போது ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.