world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவ கர்னல்  காசாவில் பலி 

இஸ்ரேலின் 401 ஆவது கவசப் படைப் பிரிவின் தளபதி கர்னல் எஹ்சான் தக்ஸா வடக்கு காசாவில்  உள்ள  ஜபாலியா முகாமில் பலியாகியுள்ளார். இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் தொடர்ந்து குண்டுவீசி பாலஸ்தீனர்களை படுகொலை செய்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு  வைத்திருந்த பீரங்கி தகர்ப்பு கண்ணி வெடிகுண்டில் சிக்கி  பீரங்கி வெடித்து இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவ தளபதி பலியாகியுள்ளார்.  

அதானி தயாரிப்பு டிரோனை   வீழ்த்திய ஹிஸ்புல்லா அமைப்பு 

அதானி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஹெர்மஸ்-900 டிரோனை ஹிஸ்புல்லா அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. லெபனான் மீது  இஸ்ரேல் ராணுவம் தரைவழி, வான் வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. ஞாயிறன்று நடை பெற்ற தாக்குதலில் டிரோனை வீழ்த்தியதுடன் மற்றொரு டிரோனை பின்வாங்கச் செய்ததாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. பாலஸ் தீனர்களை இனப்படுகொலை செய்ய அதானி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த டிரோனை தான் இஸ்ரேல் அதிகளவு பயன்படுத்தியுள்ளது.

தலைக்காயத்தால் ரஷ்யா பயணத்தை  தவிர்த்த லூலா

பிரேசில் ஜனாதிபதி லூலாவிற்கு தலைக் காயம் (ரத்தக்கசிவு) ஏற்பட்டுள்ளதால் ரஷ்யாவில் நடைபெறும்  பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற் கான பயணத்தை தவிர்ப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைக்காயம் காரணமாக தொலை தூரப்பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலு வலகம் தெரிவித்துள்ளது. எனினும் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்பார் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

லெபனானின் பொருளாதார ஆதாரங்களை  அழிக்கும் இஸ்ரேல் 

லெபனான்  மக்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் அல்-கார்ட் அல்-ஹசன் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய அலு வலகங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கு தல் நடத்தியுள்ளது.ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளங்கள் மற்றும்  அலுவலகங்கள் மீது தாக்குதல்நடத்துவதாக கூறும் இஸ்ரேல் ராணுவம் பொதுமக்கள்  மீது குண்டு வீசி  வந்தது. தற்போது அம்மக்களின் ்பொருளாதார ஆதாரங் கள் மீதும் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் அதிகரிக்கும்  போலியோ தொற்று

பாகிஸ்தானில் போலியோ தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 6 பேருக்கு மட்டுமே போலி யோ தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 39 நபர்களுக்கு புதிதாக போலியோ தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு  போலியோ ஒழிப்புக்கான தேசிய அவசர செயல்பாட்டு மைய தலைவர் அன்வருல் ஹக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மோசமான பொருளாதார கொள்கை  போலியோ தொற்றை முற்றிலுமாக தவிர்ப்பதில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.