world

img

அணு ஆயுத கண்காணிப்பு குழுவுக்கு வடகொரியா எதிர்ப்பு

பியாங்யாங், அக்.21- வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கண்காணிக்க அமெரிக்கா தலை மையில் புதிய பன்னாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வை அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அறிவித்துள்ளன.  ஐ.நா அவையில் வட கொரியா மீதான தடைகளை கண்காணிக்கும் நட வடிக்கைகளை ரஷ்யாவும் சீனாவும் தடுத்த பின்னர் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வட கொரியா மீதான தடைகளை கண் காணித்து வந்த ஐநா நிபுணர் குழுவை, புதுப்பிக்க ரஷ்யா மார்ச் மாதம் மறுப்பு தெரிவித்தது. வட கொரியாவின் முக்கிய நேச நாடும், பொருளாதார ஆதரவாளருமான சீனா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.  புதிய கண்காணிப்பு குழுவை “முற்றிலும் சட்டவிரோதமானது” என வட கொரியா கண்டித்துள்ளது. இது தங்கள் இறையாண்மைக்கு எதிரான மிக மோசமான மீறல் என வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சான் ஹுய் கூறியுள்ளார்.