articles

img

உணவு உரிமையை பாதுகாத்த உறுதிமிக்க போராட்டம் - எம்.கலியமூர்த்தி

புதுச்சேரி மாநிலத்தில் இன்று 515 ரேசன் கடைகளை 
மாநில அரசு திறந்துள்ளது. இது கடந்த எட்டாண்டு காலத்திற்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. போராடிய தோழர்களுக்கும்,  ஆதரித்த புதுவை மக்களுக்கும் நன்றியும், பாராட்டும்!
-ஜி.ராமகிருஷ்ணன், 
சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

புதுச்சேரி மாநிலம் 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட, புதுச்சேரி, காரைக்கால், மகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ள டக்கிய ஒரு சின்னஞ் சிறிய மாநிலம். இது ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றத்து டன் கூடிய யூனியன் பிரதேசமாக இருந்து வரு கிறது. ஒன்றிய அரசு, தன்னுடைய மக்கள் விரோத திட்டங்களை பரிசோதிக்கும் தளமாக புதுச்சேரியைப் பார்க்கிறது.

மக்களின் உணவு உரிமை தட்டிப்பறிப்பு

மக்களின் உணவு உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இந்தியா 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாடுகின்ற தேசம். பட்டினிக் குறியீட்டில் உலகின் 125 நாடுகள் கொண்ட பட்டிய லில் இந்தியா 111-ஆவது இடம் என்ற மோசமான நிலையிலும், உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றில் இந்தியா மிக மோசமான நிலையிலும் இருக்கக்கூடிய சூழலில், புதுச்சேரியில் இருக்கும் ரேஷன் கார்டுகளில் சரிபாதி சிவப்பு ரேஷன் கார்டுகள் - அதாவது புதுச்சேரி மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கக்கூடிய நிலையில் - புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டு, அரிசிக்குப் பதில் பணம் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அறிவித்தது புதுவை அரசு. 2016-ஆம் ஆண்டு அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ரேஷனில் வழங்கப் படும் அரிசியின் தரம் சரியில்லை என்று கூறி, தரமான அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரேஷன் கடை களை மூட உத்தரவிட்டார். அரசின் அறிவிப்பு மக்க ளின் அடிப்படை உரிமையான உணவு உரிமை யைப் பறிக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உடனடியாக கண்டித்ததோடு களப் போராட்டத்திலும் இறங்கியது.

மக்களிடத்திலே கள ஆய்வு, அனைத்துப் பகுதிகளி லும் தொடர்ச்சியாகப் பிரச்சாரம், கையெழுத்து இயக்கம், குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் தலைமைச் செயலகம் முற்றுகை, மறியல் போராட் டம், புதுச்சேரி மக்களின் உணவு உரிமைக்கான சிறப்பு மாநாடு என சாத்தியமான அனைத்துப் போராட் டங்களையும் தொடர்ச்சியாக நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி யிடம் தலைவர்கள் ரேஷன் கடை தொடர்பாக முறை யிடும்போது, “இது மத்திய அரசின் முடிவு, அமல் படுத்தித்தான் ஆக வேண்டும்” என்று ஆணவ மாகப் பதில் அளித்தார். இதே வார்த்தைகளை எதிரொ லித்தார் அதன்பின் வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். “இது ஒன்றிய அரசின் திட்டம், இதனை மாற்றவோ திரும்பப் பெறவோ நம்மால் எதுவும் செய்ய முடியாது” என்று தன் இயலாமையை வெளிப்படுத்தினார் முதல்வர் ந.ரங்கசாமி.  இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்றார் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவண குமார். தன் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களை அழைத்து வந்து ஒன்றிய அரசு அதிகாரிகள் முன்பு மக்கள் அரிசிக்குப் பதில் பணம்தான் கேட்கிறார்கள் என்பது போன்ற நாடகத்தை அரங்கேற்ற முயற்சித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் உடனடித் தலையீட்டா லும், பிரச்சாரத்தாலும் மக்களிடத்திலே அம்பலப் பட்டுப் போனார் அமைச்சர்.

ரேஷன் கடைக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்கள்

  1.  ரேஷன் கடைகளை மூடிய 2016-ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான போராட்டங்களை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. 2019 நவம்பர்21 நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் இருந்து பேரணியாகச் சென்று தலைமை தபால் நிலையம் முன்புஆர்ப்பாட்டம்.
  2.  2020 மார்ச் 5 அன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்தலைமை தபால் நிலையம் முன்புஆர்ப்பாட்டம்.
  3.  2020 ஜூலை 9 கட்சியின் அனைத்து இடைக்கமிட்டிகளும் கண்டன ஆர்ப்பாட்டம்.
  4.  2021 டிசம்பர் 29 ‘கரங்களை இணைப்போம் உணவு உரிமையை மீட்போம்’ மனிதச் சங்கிலிப் போராட்டம் - 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
  5.  2022 ஜூலை, மாநிலம் முழுவதும் ரேஷன் கடையைத் திறக்க வலியுறுத்தி மக்களிடத்திலே கையெழுத்து இயக்கம்.
  6.  2022 ஆகஸ்ட் 02, தலைமைச் செயலகம் முன்புகாத்திருப்புப் போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு. முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமி போராட்டக்களத்திற்கே வந்து ஆதரவு தெரிவித்தார்.
  7.  2022 செப்டம்பர் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பிரச்சாரம், நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டங்கள்.
  8.  2023 மீண்டும் மாநிலம் முழுவதும் மக்களிடத்திலே கையெழுத்து இயக்கம், மக்களின் கோரிக்கைக் கையெழுத்தை முதல்வரிடம் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சமர்ப்பிப்பு.
  9.  2024 பிப்ரவரி குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகம் முன்பு நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் காத்திருப்புப் போராட்டம், ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மறியல்.
  10.  2024 ஜூலை 18 மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்புடன் புதுச்சேரி மக்களின் உணவு உரிமைப் பாதுகாப்பு சிறப்பு மாநாடு. இவை தவிர, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் களஆய்வு, முற்றுகைப் போராட்டம், சிறப்பு கருத்தரங்கம், தீபாவளி பஜார் என்ற பெயரிலான கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பிரச்சார இயக்கம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. .

பாடம் புகட்டிய  நாடாளுமன்றத் தேர்தல்

இவ்வாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ச்சி யாக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் புதுவை அரசின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  முதல்வரும் வேட்பாளரும் மக்களிடத்திலே வாக்கு சேகரிக்கச் செல்லும் இடமெல்லாம், “எப்போது ரேஷன் கடையை மீண்டும் திறப்பீர்கள்?” என்று மக்கள் கேட்க ஆரம்பித்தனர். கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்களின் தீர்ப்பைத் தேர்தலிலும் வழங்கினார்கள். ஆட்சி, அதிகாரம், படைபலம் மற்றும் பணபலத்தின் மூலம் எளிதாக வெற்றி பெற்றுவிட லாம் என்று கணக்குப் போட்ட என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு புதுச்சேரியின் அனைத்துப் பகுதி மக்களும் படுதோல்வியைப் பரிசளித்தார்கள். மக்க ளின் கோபாவேசக் கேள்விகளும், நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு கிடைத்த படுதோல்வி என்பதும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 8 ஆண்டு கால தொடர் போராட் டத்தின் முதல் வெற்றி ஆகும்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து “ரேஷன் கடையை மூடியது ஒன்றிய அரசின் திட்டம், தன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லி வந்த முதல்வர் ந.ரங்கசாமி, தீபாவளிக்கு முன்பு ரேஷன் கடைகள் திறக்கப்படும், அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்க வைத்தது நாடாளு மன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு. முதல்வர் அறிவித்தபடி 21.10.2024 அன்று ரேஷன் பொருட்கள் வழங்குவதைத் தொடங்கி வைத்துள்ளார் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது, மாதாமாதம் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம், மக்களுக்கான உணவு உரிமையைப் பறிக்க நினைத்த ஒன்றிய அரசின் பரிசோதனை முயற்சி முறியடிக்கப்பட்டதோடு, மக்களின் உணவு உரிமையையும் பாதுகாத்துள்ளது.