articles

img

சாதி ஒழிப்பும், சாதிவாரி கணக்கெடுப்பும்... - சா.பீட்டர் அல்போன்ஸ்

“சாதி எனும் அழுக்கு” என்றார் fள் சிலர். இல்லை! அது “நம் சமூகத்தின் சாபம்” என்றார்கள் மற்றும் சிலர். கலைஞர் தனக்கே உரிய பாணியில் “சதிக்கு கால் முளைத்து சாதியானது” என்று சொன்னார்.  இதனை “தர்மம்” என்று பிரச்சாரம் செய்யும்  கூட்டமும் இங்கே உண்டு. சனாதன தர்மத் தின் உள்ளீடான வர்ணாசிரம தர்மம் இறை வனால் விதிக்கப்பட்டது என்றும் அது என் றென்றும் மாறாதது, மாற்ற முடியாதது, மாற்றக் கூடாதது என்றே பல தலைமுறை களாக நமக்கு போதிக்கப்பட்டது.  இந்து மதத்தின் வழி முறையாக, அதன் பண்பாட்டுக் கூறாக அது வகுக்கப்பட்டி ருந்தாலும் இந்திய மண்ணில் கால் பதித்த எந்த மதமும் இம்மண்ணில் சாதியை வெற்றி கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே” என்று இறைவனை அழைக்க அனைத்து மக்களுக்கும் போ தித்த கிறித்தவம் இந்தியர்களிடம் இருந்த சாதி எனும் அழுக்கை அகற்ற முடிய வில்லை. மதம் மாறிய இந்திய கிறித்த வர்களும் தங்கள் சாதிய அடையாளங்க ளை அப்படியே பத்திரமாக பாதுகாத்துக் கொண்டனர். 

விடாது கருப்பு என்பது போல...

இந்த சாதிய வேற்றுமைகளைக் களைவதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட பவுத்தமும், சமணமும், சீக்கியமும் சாதி எனும் சதியிடம் தோற்றுப் போனதுதான் உண்மை.  சாதிய வேற்றுமைகளுக்கு அப்பாற் பட்டது இஸ்லாம் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். இன்று அவர்களை யும் சாதிகளாய் பிரிக்க வலதுசாரி பாசிச மதவாத சக்திகள் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு, பட்டியல் இன மக்களிடமிருந்து இஸ்லாமுக்கு  மதம் மாறியவர்களை “பஸ்மானந்தா முஸ்லிம்கள்” என்று வகைப்படுத்துகின்ற னர். இவர்களை அணுகி அவர்களை பாஜக வில் சேர்க்கவேண்டும் என்று நமது பிரத மர் அடிக்கடி அவரது கட்சி தொண்டர்களு க்கு அறிவுரை வழங்கி வருகின்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் இவர்களுக்காக தற்போது தனி அமைப்புக்கள் துவக்கப் பட்டுள்ளன.   அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடி யேறியுள்ள இந்தியர்கள் கூட அங்கே  தங்களது சாதி சங்கங்களின் கிளைகளை  துவங்கி தங்களது சாதிய அடையாளங்க ளை பெருமையுடன் கொண்டாடி வரு கின்றனர். ‘விடாது கருப்பு!’ என்று எங்கள் கிராமத்தில் சொல்வதுபோல எங்கே போனாலும், என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும் இந்த பாழாய் போன சாதி நம்மை விடாது. தந்தை பெரியாரிடம் கேட்டார்கள், “சாதி பெரிதா? மதம் பெரிதா?”என்று. அவர் சொன்னார், “சாதி தான் பெரிது. மதத்தை மாற்றமுடியும். சாதியை மாற்ற  முடியாது”என்றார். இதைத்தான் அவர்கள் “இது மாறாதது” என்கிறார்கள். இதனை ஒழித்து விடவேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முயற்சிகள் நடந்தன. இன்னும் நடந்து கொண்டு வருகின்றன. பல மாபெரும் புரட்சியாளர்கள் இதற்கான இயக்கம் கண்டனர். ஆனால் சாதி எனும் சதியை இன்னும் நம்மால் வெற்றி கொள்ள  முடியவில்லை என்பதுதான் உண்மை.

காந்தியை வீட்டுக்கு வெளியே அமர வைத்த சாதி...

இந்திய சமூகத்தில் சாதியின் வீச்சுக் கும், தாக்கத்துக்கும் யாரும் தப்ப முடி யாது. நாம் நம் தேசத்தின் தந்தை என்று கொண்டாடுகின்ற மகாத்மாவைக் கூட சாதி  விட்டு வைக்கவில்லை. பால கங்காதர திலகர் இறந்த போது அவரது பாடை யைத் தூக்க அவரது உறவினர்கள் காந்தி யடிகளை அனுமதிக்கவில்லை. பிராமண ரான திலகரது உடலை ஷத்திரியரான காந்தி தூக்க முடியாது என்று சொல்லி விட்டது வருணாசிரம தர்மம். மைலாப் பூர் அக்கிரகாரத்திலும், வைக்கத்தில் நம்பூ திரிகள் வீட்டிலும் காந்தியடிகள் வீட்டுக்கு வெளியேதான் அமர வைக்கப்பட்டார்.  அரசியல் உலகில் மட்டும் அல்ல.ஆன்மீக அரங்கிலும் சாதியின் வாடை இருந்தது. இந்து மதத்தின் மறுமலர்ச்சி நாயகர் என்று கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தர் மீதும் சாதியின் தாக்கம் இருந்ததை பார்க்கிறோம். 1892 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வந்த விவேகா னந்தர் மனோன்மணியம் சுந்தரனாரை சந்தித்து பேசியுள்ளார். சுந்தரனார் வீட்டில் விருந்துண்ட விவேகானந்தர் சுந்தரனாரி டம் “உங்கள் கோத்திரம் என்ன?”. என்று கேட்டுள்ளார். சுந்தரனார் தனது நாட் குறிப்பில் எழுதுகிறார். “வேறு ஒரு தினமா கில் வினாவினைக் கேட்டவுடன் நான் வெகுண்டிருப்பேன். உறவின் விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான்  மெல்லிய குரலில் எனக்கும் கோத்திரத்திற் கும் சம்பந்தம் கிடையாது. தன் மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என ஆத்திர மின்றி  கோத்திர கேள்விக்கு விடைய ளித்தேன்” என்று தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

வெளிநாட்டுத் துறவியையும் விட்டு  வைக்காத சாதி

உள்நாட்டு துறவிகள் மட்டுமல்ல. வெளிநாட்டில் இருந்து வந்த துறவிகளை யும் “சாதி” விட்டுவைக்கவில்லை. இத்தாலி யில் இருந்து வேதபோதகத்திற்காக தமிழ கம் வந்த ராபர்ட் டி நோபிலி என்ற கத்தோ லிக்க பாதிரியார் “சாதி இந்துக்களை” மதம் மாற்றுவதற்காக தன்னையே “ரோமாபுரி பிராமணர்” என்றழைத்துக்கொண்டார். பூணூல் தரித்து, தலையில் குடுமியுடன் காவி உடையும் தரித்து முழு சைவராக மாறிவிட்டார். அக்கிரகாரத்தில் வீடு எடுத்து குடியேறி சமஸ்கிருதம் பயின்று சில பிராமணர்களையே மதம் மாற்றிய தாக அவர் ரோமை திருச்சபையின் தலைவ ருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக அறிகிறோம். 

பட்டியலின மக்களை சேர்க்காத பச்சையப்பன் கல்லூரி...

ஆன்மீக வளாகங்கள் மட்டுமல்ல கல்வி நிறுவனங்கள் கூட சாதி பாராட்டின என்பதுதான் வரலாறு நம் நாட்டின் பூர்வ குடிகளான இன்றைய பட்டியல் இன மக்களை சாதியற்றவர்களாக வருணாசிர மம் வகைப்படுத்தியதால் அவர்களை இந்துக்கள் என்று கூட சாதியக்கட்டமைப்பு க்குள் இருந்தவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. 1927 வரை பச்சையப்பன் கல்லூரி யில் ஆதிதிராவிடர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் “இந்த அறக் கட்டளை இந்து தர்ம ஸ்தாபனம்.ஆதி திராவிடர்கள் இந்துக்கள் அல்ல. எனவே  அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை” என்றனர். நீதிபதி அவர்களை கடுமையாக கண்டித்து ஆதிதிராவிடர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் தான் அறக்கட்டளை அவர்க ளை கல்லூரியில் சேர்த்தது.  இதைத்தான் அம்பேத்கர் சுட்டிக்காட்டி னார். நாம் போராடிப் பெற்ற சுதந்திரமும், நமது அரசியல் சாசன சட்டமும் கூட இந்த  சாதியிடம் தோற்றுப் போவதை அரசியல் சட்ட நிர்ணய சபையிலேயே வேதனை யுடன் வெளிப்படுத்தினார். 1949 நவம்பர் 26 அன்று அரசியல் சாசன சட்டத்தை அறி முகப்படுத்தும் போது அவர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்வது பொருத்த மாக இருக்கும்.

அம்பேத்கரின் அர்த்தமுள்ள வார்த்தைகள்

“1950 ஜனவரி 26 ஆம் நாள், முரண்பாடு கள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் நுழைய இருக்கிறோம். இன்றிலிருந்து நம்  இந்தியர்கள் அனைவருக்கும் அரசியல் சமத்துவம் இருக்கும். ஆனால் நமது சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் காரணமாக நம் மக்களிடையே சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் இருக் காது. அனைவரும் சமம் என்ற கோட்பாடு நம்மில் பலருக்கு மறுக்கப்படும். இந்த முரண்பட்ட சூழலில் நாம் எவ்வளவு நாள்  பயணிக்க முடியும்? சமூக, பொருளாதார சமத்துவத்தை அவர்களுக்கு நாம் தொ டர்ந்து மறுத்தால் அது நமது அரசியல் சுதந்திரத்தை விரைவில் கொன்று விடும். வெகுவிரைவில் இந்த சமத்துவமின்மை நீக்கப் பட வேண்டும். இல்லையெனில் இதனால் பாதிக்கப்படும் மக்கள், நமது நிர்ணய சபை, தியாகத்தாலும், கடின உழைப்பாலும் உருவாக்கியுள்ள அரசியல் சுதந்திரத்தை அடித்து நொறுக்கி விடுவர்” என்று சொன்னார். முக்கால் நூற்றாண்டு  கடந்து விட்ட போதிலும் அம்பேத்கர் கனவு கண்ட சமூக மற்றும் பொருளாதார சமத்துவ ஜனநாயகத்தை நம் மக்களுக்கு தரமுடியவில்லை என்பதே யதார்த்தம். “சமூக மற்றும் பொருளாதார சமத்து வத்தை அனைவருக்கும் உறுதி செய்த பின் னர்தான் நாட்டுக்கு விடுதலை வேண்டும்.  அது உறுதி செய்யப்படும் வரை ஆங்கிலே யரே ஆளட்டும்” என்ற தந்தை பெரியார் போன்றவர்களின் நிலைப்பாட்டை அன்று பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்க ளைச் சார்ந்த தலைவர்கள், அரசியல் சுதந்தி ரம் கிடைத்துவிட்டால் சமூக மற்றும் பொ ருளாதார சமத்துவத்தை நாமே நம் மக்க ளுக்கு உருவாக்கி தரமுடியும் என்று உறுதி யாக நம்பினர். “கல்வி,வேலை வாய்ப்புகள் மற்றும் அரசு அதிகார அமைப்புகளில் அனைத்து சமூகத்தினரும் சமமாக பங் கேற்கும் ஏற்பாட்டை உறுதி செய்யாத வரை  அரசியல் சுதந்திரத்தால் பயன் ஏதும் இல்லை” என்ற பெரியாரின் நிலைப் பாட்டில் நியாயம் உள்ளது என்பதை இன்று நம்மில் பலர் ஏற்றுக் கொள்கிறோம்.

சமத்துவ சமூகத்தை கட்டமைக்கும் முயற்சி...

சமத்துவமான சமூகத்தை கட்டமைக்க இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் இயக் கத்தினரும் தங்களால் இயன்ற முயற்சி களை முன்னெடுத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நேருவின் அரசு தனது கொள்கை “ஜனநாயக சோஷலிசம்” என்ற றிவித்தது. பெரும் பொதுத் துறை நிறுவ னங்களை உருவாக்கியது. ஐந்தாண்டு திட்டங்களை தீட்டி பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சி என்று அடித்தட்டு மக்க ளின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிகோலியது. பொதுவுடைமை கட்சிக ளை சார்ந்தவர்கள் தொழிலாளர்கள், விவ சாயிகள், நெசவாளர்கள் மற்றும் உழைக் கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடினார்கள். கல்வி மற்றும் அரசு வேலைகளில் பிராமணர் மற்றும் இதர முன்னேறிய சமூகத்தின ருக்கு கிடைத்த வாய்ப்புகளைப்போல இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களை திராவிட கட்சிகள் முன்னெடுத்தன.

மோடி அதிகாரத்துக்கு வந்தபின்...

தேர்தலில் போட்டியிடாத முற்போக்கு சமூக இயக்கங்களும், தேர்தல் முடிவு களைப் பற்றி கவலைப்படாத அரசியல் கட்சிகளும் சாதி ஒழிப்பைப்பற்றி தொடர்ந்து பேசி வந்தாலும் வெகுஜன அர சியல் கட்சிகளால் சாதிகளைத் தாண்டி  சிந்திக்கவும் செயல்படவும் முடியவில்லை.  சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சாதியே ஊடாடுவதால், சாதிய கட்டமைப்பு களை மீறி தேர்தல் வெற்றிகள் சாத்தியப் படவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு பிரதிநிதித் துவம் வழங்கிய காலங்கள் கடந்து தற் போது ஒவ்வொரு சாதிக்காக உருவாக் கப்பட்டுள்ள “சாதிக்கட்சிகளையே” தங்க ளது கூட்டணியில் சேர்க்க வேண்டிய நிர்ப் பந்தங்கள் இன்று வெகுஜன கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக மோடி அரசு மத்தியிலே அதிகா ரத்திற்கு வந்த பின்னர் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் சாதி-மத பிரிவினைக ளைச்சுற்றியே வடிவமைக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் மத நம்பிக்கை கொண்டவர்களாகவும்,சாதிப் பெருமை அல்லது இனப்பற்று உள்ளவர்களாகவும் இருப்பதால் அந்த உணர்வுகளை வெறி யாக வளர்த்தெடுப்பதின் மூலம் வாக்கு  வங்கிகளை உருவாக்கி அதன் மூலம் அரசி யல் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் வலதுசாரி பாசிச அரசியல் கட்சிகளின் தேர்தல் யுக்தியாக இருந்து வருகிறது. கொள்கை சார்ந்து லட்சிய நோக்குடன் செயல்படும் அரசியல் கட்சிகளால், சாதி-மத அடையாளங்களை முன்னிறுத்தி செயல்படும் கட்சிகளோடு தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெற இயலவில்லை. சாதி மத மோதல்கள் இந்திய சமூகங்களுக்கு புதிதல்ல என்றா லும், காலம் காலமாக அத்தகைய பிரி வினைகள் அங்கொன்றும் இங்கொன்று மாக காணப்பட்டாலும் இன்று சாதி-மத அர சியலுக்கு ஏற்பட்டுள்ள “புதிய பரிணாமம்” நம்மை கவலையடையச்செய்கிறது.

உண்மையான எதிரி யார்?

நமது சமூக கட்டமைப்பின் அரசியல், பொருளாதார, கலாச்சார, அரசு நிர்வாகம் உட்பட அனைத்து கூறுகளும் இந்த சாதி- மத அரசியலுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளன.  இந்த அடையாள அரசிய லுக்கு பின்னால் இருந்து இயக்குகின்ற “ஆரிய- முதலாளித்துவ” சக்திகளின் பாவக்கூட்டணியை அம்பலப்படுத்தி தோ லுரிக்காமல் ஜனநாயக சக்திகள் களத்தில் வெற்றி பெறமுடியாது. தலித்துகள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று நாட்டின் 95  சதவீதம் மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய அதிகாரத்தையும், செல்வத்தை யும், முன்னேற்றத்தையும், வளர்ச்சியை யும் ஒரு மிகச் சிறிய கூட்டம் அபகரித்துக் கொள்வதற்கான தந்திரமே இந்த சாதி- மத அரசியல் என்பதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரியவைப்பதே நமது முழு நேர அரசியல் செயல்பாடாக இருக்க வேண்டும். தங்களுக்கு எதிரான யுத்தத்தில் தங்களைத் தோற்கடிக்கவே தங்களது எதி ரிகளோடு சேர்ந்து நின்று போரிடுகிறோம் என்கிற புரிதலே இல்லாமல் களத்தில் காவு  கொடுக்கப்படும் மக்களிடம் அவர்களது உண்மையான எதிரி யார் என்று சொல்ல வேண்டும். அதன் முதல் கட்டமாக மதமயமாக்கப் பட்டு, சாதி வெறியூட்டப்பட்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்த “பாசிச வகுப்பு வாத வெறுப்பு அரசியல்” மூலம் அவர்கள் எவற்றையெல்லாம் இழந்து நிற்கின்றனர் என்பதை ஆதாரங்க ளோடு உணர்த்த வேண்டும். 

வரமும் சாபமும்...

ஏன் அவர்களுடைய கைகளில் மட்டும் தேன் கிண்ணங்கள்? ஏன் நம் மக்களின் மட்டும் பிச்சைப் பாத்திரங்கள்? எப்படி அவர்கள் மட்டுமே அனைத்து அதிகார நாற்காலிகளில் எப்போதும் அமர்ந்திருக்கி றார்கள்? நாம் ஏன் எப்போதுமே “அவர்களு க்கு” ஏவல் செய்கின்றவர்கள் ஆகவே  இருக்கிறோம்? சுதந்திரமும், சுதந்திரம்  தந்துள்ள முன்னேற்றமும் வளர்ச்சியும் அவர்களுக்கு மட்டும் தானா? அதில் நமக்கு பங்கில்லையா? வாக்களிக்க மட்டு மே வாழ்பவர்கள் நாம்! அதிகாரத்தில் இருந்து ஆட்சி செய்வது அவர்கள் மட்டு மே!- என்ற நம் தலையில் விழுந்துள்ள சாபத்திற்கு விமோசனமே இல்லையா? என்ற கேள்விகளை நம் இளைஞர்களை கேட்கச் செய்வதின் மூலமே அம்பேத்கர் கனவு கண்ட சமூக,பொருளாதார ஜனநாய கத்தை வசப்படுத்த முடியும். 

பின்னிப் பிணைந்து கிடக்கும் சாதியும் வர்க்கமும்

இந்தியாவில் மட்டும்தான் சாதியும், வர்க்கமும் ஒன்றாக பின்னிப் பிணைந்து கிடப்பதை அறிய வேண்டும். அது எப்படி பணக்காரர்களாக இருப்பவர்களில் மிகப்பெரும்பாலோர் “அவர்களாகவே” இருக்கிறார்கள்? ஏன் ஏழைகளில் அநேக மாக எல்லோரும் “நம்மவர்களாகவே இருக்கிறார்கள்? எப்படி 125 நாடுகளிலே மிக உயர்ந்த பதவியான நம் நாட்டின் தூதர்களாக பணியாற்றும் அனைவரும் ‘அவர்களாகவே’ இருக்கிறார்கள்? ஆனால் இந்த நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் தெருக்களை சுத்தம் செய்யவும், மலம் அள்ளவும், சாக்கடை நீர்களை அப்புறப்படுத்தவும், சுடுகாட்டில் பிணம் எரிக்கவும் பணியமர்த்தப்பட்டி ருக்கும் சுகாதார பணியாளர்களின் 92% தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கிறார்களே ஏன்? (பட்டி யல் இனங்கள் 68.9%, 14.7% பிற்படுத்தப் பட்டோர், 8.3%பழங்குடியினர், 8% மற்ற வர்கள்).  உச்ச நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றங்களிலும் நீதியரசர்களாக இருக் கின்றவர்களில் 80%க்கு மேல் ஒரே சமூ கத்தைச் சார்ந்தவராக இருக்கின்றார்க ளே, எப்படி? அதே நேரத்தில் இந்திய  சிறைகளில் விசாரணைக் கைதிகளா கவே பல்லாண்டுகாலம் அடைபட்டுக் கிடக்கின்றவர்கள் அநேகமாக அனை வரும் தலித்துகளாகவும், பழங்குடியி னராகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சிறுபான்மையினராகவும் இருப்பதன் பின்னணி என்ன? ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தொழிற் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் (90%) அனைத்து மாண வர்களும் (85%) “அவர்களாகவே” இருக்கிறார்களே அது இயற்கையாகவே நடந்ததா? அங்கே தப்பித் தவறி இடம் கிடைத்து சேருகின்ற “அவர்களல்லாத” மாணவர்களின் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்களே, ஏன்?  போன்ற கேள்வி களெல்லாம் நியாயமானவைகள் தானே!

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயங்குவது பின்னணி...

ராகுல் காந்தி ஒரு கேள்வி கேட்டார். பல்வேறு இடங்களில் இந்திய அழகியை தேர்ந்தெடுப்பதற்கு நடத்துகின்ற அழகிப் போட்டிகளில் ஏன் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட இனங்களைச் சார்ந்த  பெண்கள் ஒரு முறை கூட தேர்ந்தெடுக் கப்படுவதில்லை? என்று. அவர்களது பெண்கள் அலங்காரப் பதுமைகளாக, அகில உலகமும் கொண் டாடக்கூடிய அழகின் அவதாரங்களாக நாகரிகத் தாழ்வாரங்களில் பவனி வரும் அதே வேளையில், பாலியல் வன்புணர்வு க்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப் பட்டு அனாதைப் பிணங்களாய் பிணவறை களில் கிடத்தப்பட்டிருக்கும் பெண்களில் அனேகர் நமது பெண்களாக இருக்கி றார்களே!  அது எப்படி? சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் அவர்கள் தயங்குகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா? அது நடத்தப்பட்டால் தான் நம்மில் யாருக்கெல்லாம் எது வெல்லாம், எப்படியெல்லாம் எவ்வாறெல் லாம், எங்கேயெல்லாம்  மறுக்கப்பட்டிருக் கின்றன என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும்! இதைத்தான் தந்தை பெரியார் அன்றே சொன்னார் “சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். அரசியலும், பொருளாதாரமும் சமூக அமை ப்புகள் பெற்ற குழந்தைகளே” என்று. இந்த சமூக அமைப்பை மாற்றி அமைப்போம்! உடைத்தெறிவோம்!! அதன் துவக்கமே “சாதிவாரி கணக் கெடுப்பு”!