india

img

பி.எஸ்.என்.எல்-இன் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்!

பி.எஸ்.என்.எல்-இன் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை ஒன்றிய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-இன் புதிய லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியிருப்பதும், பி.எஸ்.என்.எல் 'கனெக்ட்டிங் இந்தியா' என்பதை பி.எஸ்.என்.எல் 'கனெக்ட்டிங் பாரத்' என்று மாற்றப்பட்டுள்ளதும் பொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
முன்னதாக ஒன்றிய அரசு கீழ் செயல்படும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியின் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.