நியூயார்க், நவ.13- அமெரிக்க ஜனாதிபதி யாக தேர்வாகியுள்ள டொ னால்டு டிரம்ப் உருவாக்கி யுள்ள செயல்திறன் துறை க்கு (DOGE) எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை தலைமையாக நியமித்துள் ளார். செயல்திறன் துறை பொதுவாக ஒரு நாட்டின் செயல்திறன் துறையின் நோக்கம் அந்நாட்டின் திட் டங்களை வடிவமைப்பதா கும். டிரம்ப் புதிதாக உரு வாக்கியுள்ள இந்த துறை மூலம் அரசாங்கத்தின் இயல் பான அதிகாரத்தை அகற்றி விட்டு நேரடியாக அமெ ரிக்க அரசில் முதலாளிக ளுக்கான திட்டத்தை வகுக் கும் திட்டக்குழுவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நோக்கம் அதிகப்படியான விதிமுறை களை குறைப்பது, வீண் செலவுகளை அகற்றுவது என்ற பெயரில் சமூக நலத் திட்டங்களை வெட்டுவது, கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைத்து முதலாளி களின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துறை தலைவர்கள் உலகின் மிகப்பெரும் முதலாளியும் டிரம்பின் தேர்தல் செலவுகளுக்கு நிதி உதவி செய்தவருமான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இந்திய-அமெரிக்க தொழி லதிபரும் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பா ளராக டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு பிறகு டிரம்பு க்கு ஆதரவு தெரிவித்த மருந்து உற்பத்தி நிறுவ னத்தின் நிறுவனராக உள்ள கோடீஸ்வரர் விவேக் ராம சாமி ஆகியோரை டிரம்ப் தலைவர்களாக நியமித்துள் ளார். இவர்களுடைய பணி 2026 ஆம் ஆண்டு ஜூலை 4 க்குள் முடிவடையும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தம் தேர்தல் பிரச்சாரத்தின் போது எலான் மஸ்க் ஒவ் வொரு மாதமும் சுமார் 300 கோடி ரூபாய் வரை டிரம்பிற் காக செலவு செய்தார். அப் போதே தான் வெற்றி பெற்ற வுடன் எலான் மஸ்கிற்கு தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக வாக்கு றுதி கொடுத்திருந்தார். டிரம்ப் வெற்றிக்கு பிறகு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய எலான் மஸ்க் நிறு வனங்களின் லாபம் பல லட்சம் கோடிகளுக்கு உயர்ந் தது. இந்நிலையில் தான் டிரம்ப் புதிய துறையையே உருவாக்கி எலான் மஸ்க்கிற் கும், விவேக் ராமசாமிக்கும் புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.