world

img

வலென்சியா அரசாங்கத்தை கண்டித்து லட்சம் பேர் போராட்டம்

மாட்ரிட்,நவ.14- ஸ்பெயின் நாட்டின் வலென்சியா தன்னாட் சிப்பகுதி அரசாங்கத்தின் அலட்சியத்தின் காரண மாகவே அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிக  இழப்புகளை மக்கள் சந்தித்தனர். இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள், பொது மக்கள் வலென்சியா நகரத்தில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். அக்டோபர் மாதம் ஏற்பட்ட டானா புயலின் கார ணமாக ஏற்பட்ட பலத்த மழை, வெள்ளம் காரண மாக 220 பேர் பலியாகினர். பலரை காண வில்லை. இந்நிலையில்  வலென்சியா நகரத்தில் ஒன்று கூடிய மக்கள் புயலின் தீவிரத்தை  அர சாங்கம் குறைத்து மதிப்பிட்டதே மக்கள் அதிகம் பாதிப்பை சந்திக்க காரணம் என குற்றம்சாட்டினர். மேலும் இதற்கு முழு பொறுப்பேற்று  வலென்சிய தன்னாட்சிப்பகுதி அரசாங்கத்தின் ஜனாதிபதி கார்லோஸ் மசோன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.  மக்கள்  போராட்டத்தை தொழிற்சங்கங்க ளும்,சில பிராந்திய அமைப்புகளும் ஆதரித்துள் ளன. மேலும் மக்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டு நியாயமானதுதான் எனவும் வலென்சிய தன்னாட்சிப்பகுதி அரசாங்கத்தின் திறமையின் மை தான் அதிக பாதிப்புகள் ஏற்படக் காரணமாக அமைந்து விட்டது என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், தொழிற்சங்கங்களும் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் இதுபோன்ற  பேரிடர்க ளுக்கு நியாயமான, பாதுகாப்பான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளுக்கும் போர்க்கால அடிப் படையில் விரைந்து மீட்புப்பணிகளை  செய்யவும் அரசுத்துறைகள்  எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்பெயின் அரசின் ஒத்துழைப்பு இல்லாததும் அவர்களின் உதவி தாமதமாக கிடைத்ததுமே காரணம் என  ஜனாதிபதி கார்லோஸ் தெரிவித் தார். ஆனால் 12 மணி நேரத்திற்கு முன்பே ஸ்பெ யினின் தேசிய வானிலை அமைப்புகள் எச்சரிக்கை களை வெளியிட்டன. அப்படியிருந்தும்  கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது என பாதிக் கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் அப்போதே முறையாக முன்னெச்சரிக்கையாக ஸ்பெயின் அரசிடம் கார்லோஸ் உதவிகளை கேட்டிருந்தால் பாதிப்புகளை கட்டுப்படுத்தியி ருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.  பாதிப்புக்கு பின்பான கணக்கெடுப்பில்  மக்கள், தொழிலாளர்கள் என  சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர், 35,000 தொழில் நிறுவனங்கள்  வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற ஒரு பேரழிவு ஏற்படும்போதெல்லாம், அதன் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக  தொழிலாளர் வர்க்கமே உள்ளது என்று தொழிலாளர் ஆணை யங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (Comisio nes Obreras, CCOO) தெரிவித்துள்ளது.