புடின் - டிரம்ப் பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என ரஷ்ய ஜனாதி பதி அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இருவருக் கும் இடையே தொலைபேசி உரையாடல் நடக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந் நிலையில் இருவருக்கும் இடையில் உக் ரைன் - ரஷ்யா போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அது ஆதாரமற்ற செய்தி என பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ரசிகர்களின் இனவெறியை தடுக்க 4000 காவலர்கள் பாதுகாப்பு பணி
ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேல் ரசிகர்களின் இனவெறி கோசத் தால் உருவான கலவரத்தை தொடர்ந்து பாரிஸ் நகர காவல் வல்துறை 4000 காவலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. நவம்பர் 15 அன்று பிரான்ஸ்-இஸ்ரேலுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் பிரா ன்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பார்வையாளராக கலந்துகொள்ள உள்ள நிலையில் இஸ் ரேல் ரசிகர்கள் கலவரத்தை தூண்டிவிடா மல் தடுப்பதற்காக 4,000 காவலர்கள் 1,600 மைதான ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்
இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வங்கதேச முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த இன்டர்போலின் உதவியை நாடியுள்ளதாக வங்கதேச இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.இது மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு கொண்டு வருவதற்கான இடைக்கால அரசின் உறுதியான நிலைப்பாட்டின் ஒரு பகுதி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விமான நிலையங்களை தற்காலிகமாக மூடிய ரஷ்யா
டிரோன் தாக்குதல் அபாயம் இருப்பதால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ பகுதிகளில் உள்ள டொமோடெடோவோ, ஜுகோவ்ஸ்கி, ஷெரெமெட்டியோ ஆகிய சர்வதேச விமான நிலையங்களை தற் காலிகமாக மூடியுள்ளது. இதனால் இந்த விமான நிலையங்களில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை விமானங்க ளை தரையிறக்கவும் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் உக்ரைனின் 32 டிரோன் கள் ஏற்கனவே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கியூபாவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை
கியூபாவின் தெற்கு பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு கிராண்மா மாகாணத்தில் உள்ள பார்டோலோமில் இருந்து 35.5 கி.மீ தொலைவில் கட லுக்கு அடியில் 14.4 கி.மீ ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளது.1 மணிநேரத்திற்கு பிறகு 40 கி.மீ தொலைவில் 23.5 கிலோமீட்டர் ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவில் இரண்டா வது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்ச ரிக்கைகள் விடப்படவில்லை . உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.