world

img

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இடமாற்றம்  

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 18ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களையும், மாணவர்களையும் மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

இந்நிலையில் உக்ரைனில் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உட்பட, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்துக்கு இடமாற்றம் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் உக்ரைனில் வரும் காலங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.