world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நாஜிக்களின் சைகையில் வணக்கம்  எலான் மஸ்க் மீது விமர்சனம்

டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் நாஜிக்கள் பாணி சல்யூட்  செய்துள்ளார்.எலான் மஸ்க் தீவிர வலதுசாரியாகவும் வலதுசாரி கட்சிகளின் ஆதரவாளராகவும் உள் ளார். ஆதரவாளர்கள் மத்தியில் பேசி நன்றி தெரி வித்த மஸ்க் மக்களை நோக்கி நாஜி பாணி சல்யூட்  அடித்தார். இதற்கு கடுமை யான எதிர்ப்புகளும் விமர்ச னங்களும் எழுந்தது. இந்நிலையில் தன்னை விமர்சித்தவர்களை மஸ்க் விமர்சித்துள்ளார். ஹிட்லர் ஆதரவாளர் என நீங்கள் விமர்சிப்பதில் சுவாரஸ்யமே இல்லை. இன்னும் மோசமாக விமர்சிக்க முயற்சி செய்யுங்கள் என  தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.

பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு  வரி விதிக்க வேண்டும்  

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடக்கும் கட்டிடத்திற்கு வெளியே பெரும் பணக்காரர்களுக்கு/கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதிக்கவேண்டும் என கிரீன்பீஸ் என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவி னர் சுவரொட்டி ஒட்டி பிரச்சா ரம் செய்துள்ளனர்.இயற் கையை பாதுகாக்கவும், காலநிலைமாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகவும், பெரும் பணக்காரர்களுக்கு அரசுகள் வரி விதிக்க வேண்டும், பசுமையான எதிர்காலத்திற்காக நிதி கொடுங்கள் என அந்த சுவரொட்டிகளில் வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன.உலகில் உள்ள முதல் 1 சதவீத கோடீஸ்வரர்கள் தான் பெரும்பகுதியான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.