ஜெனீவா:
இந்தியாவில் உருமாற்றமடைந்துள்ள புதிய வகையான கொரோனா வைரசுக்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்குஇந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளுக்கு பரவி உள்ளது என்றும் இந்தியாவில் இருக்கும் பிற மாறுபாடுகளை காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சிவிகிதத்தை கொண்டுள்ளது. இது வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.