world

img

ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சவாலை சமாளிக்க சீன-பெரு ஜனாதிபதிகள் கூட்டறிக்கை

சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் நவம்பர் 14ஆம் நாள் மாலை பெரு நாட்டின் ஜனாதிபதி டீனா பொலுஆர்டெவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இப்பேச்சுவார்த்தையின் போது, அழைப்பை ஏற்று பெருவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்து ழைப்பு அமைப்பு தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட் டில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சியடை வதாக ஜிஜின்பிங் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இரு நாடுகளின் தூதரக உறவு நிறுவப் பட்ட 53 ஆண்டுகளில், இருதரப்பு றவு சீராக வளர்ந்து வருகிறது. கூட்டு முயற்சியுடன், சீன-பெரு இரு தரப்பின் வர்த்தகத் தொகை 1.6 மடங்கு அதிகரித்திருப்பது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைத் தந்துள்ளது. சீனா, பெரு நாட்டுடனான பாரம்பரிய நட்புக்கு மதிப்பளித்து, இரு தரப்பின் பரந்த ஒத்துழைப்பு எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்நிலையில், இரு நாட்டு மக்க ளுக்கு மேலதிக நன்மை பயக்கும் வகையில், பெருவுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, சீன-பெரு பன்முக நெடுநோக்கு கூட்டுறவு, புதிய கட்டத்தில் காலடி எடுத்து வைப்பதை முன்னெடுக்க சீனா விரும்புவதாகவும் ஜிஜின்பிங் தெரிவித்தார்.

கூட்டறிக்கை

பன்முக நெடுநோக்குக் கூட்டு றவை பலப்படுத்தும் கூட்டறிக்கை யைச் சீன மக்கள் குடியரசும் பெரு குடியரசும் கூட்டாக வெளியிட்டன. ஐ.நா.சாசனத்தின் குறிக்கோ ளையும் கோட்பாட்டையும் பின் பற்றி, அனைத்து நாடுகளின் இறை யாண்மை சுதந்திரம்,  உரிமை பிர தேச ஒருமைப்பாடு மற்றும் முக்கிய நலன்களை மதிக்க வேண்டும் என் பதை இருதரப்புகளும் உறுதிப்படுத் தின. மேலும், இவ்வறிக்கையில் ஒரே சீனா என்றகோட்பாட்டைப் பெரு உறுதியாக பின்பற்றி வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இரு நாடுகளின் உயர்நிலை தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும் இரு நாட்டுஅரசுகள், இடங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையிலான பரிமாற்றத்தை முன்னேற்றவும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை யை அதிகரிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. அதோடு, பல தரப்புவாதத்தில் ஊன்றி நின்று, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப் படுத்தி, உலக அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று இரு தரப்புகளும் தெரிவித்தன. உலக வளர்ச்சி முன்மொழிவு கட்டுக்கோப்புக்குள் சீனா மேற் கொண்டுள்ள முயற்சிகளைப் பெரு தரப்பு அங்கீகரித்து பாராட்டியதும், உலக வளர்ச்சி முன்மொழிவுக் குழுவில் பெரு சேர்வதைச் சீனா பாராட்டியதும் இந்தக் கூட்டறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்கே துறைமுகத் திறப்பு விழா

சீன ஜனாதிபதி ஜிஜின்பிங், பெரு ஜனாதிபதி டினா பொலுவார்டே ஆகியோர் நவம்பர் 14ஆம் நாளிரவு லிமாவின் ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணொலி மூலம் சான்கே  துறைமுகத்தைத் திறந்து வைத்தனர். அப்போது சில ஆண்டுகளாக நவீனமயமாக்கத் துறைமுகம் உற் சாகத்துடன் வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய ஜிஜின்பிங்,  சான்கே துறைமுகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் இயக்கும் பணி களில் கூட்டாக பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.  மேலும், கூட்டு ஆலோசனை, கூட்டு கட்டுமானம் மற்றும் கூட்டாக அனுபவிப்பதில் ஊன்றி நிற்க வேண் டும் எனக் குறிப்பிட்ட அவர், சீனா, பெரு உள்ளிட்ட பசிபிக் கடலோர பொருளாதாரங்களின் கூட்டு வளர்ச்சி, அனைத்து நாடுகளின் மக்களுக்கும் அதிக பயன்களையும் மனநிறைவையும் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.