போயிங் விமான நிறுவனமானது தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
விமான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் போயிங் கோ நிறுவனமானது, தங்களது நிறுவனத்தில் உலகம் முழுவதும் பணிபுரியும் சுமார் 17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலையை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதமே, போயிங் நிறுவனம் 10 சதவீத ஆட்குறைப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் போயிங் நிறுவனம் சந்தித்த விபத்துகள் மற்றும் வேலை நிறுத்தங்களால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.