world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கமலா ஹாரிசுக்கு  பில்கேட்ஸ் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிசுக்கு உலகின் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள்  கோடிக்கணக்கில் நன்கொடைகள் கொடுத்து ஆதரித்து வருகின்றனர். இதில் கமலா ஹாரிஸ் டிரம்ப்பை விட அதிக நன்கொடைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் உலகின் முன்னணி கோடீஸ்வரரான பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் சுமார் 420 கோடி பணத்தை கமலா ஹாரிஸுக்கு நன்கொடை கொடுத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா புதிய தலைவரை படுகொலை செய்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலை வராக பதவி ஏற்க இருந்த சையத் ஹாஷிம் சஃபிதீனையும் இஸ்ரேல் ராணுவம் புதனன்று  படுகொலை செய்து விட்டது. இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு அதனை உறுதி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்த பிறகு  சஃபிதீன்  அவ்வமைப்பின் தலைவ ராக வருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த படுகொலை அரங்கேறியுள்ளது.

அமெ. குற்றச்சாட்டுக்கு  ரஷ்யா மறுப்பு

வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆதா ரம் உள்ளது எனவும் அமெரிக்க ராணுவ செயலா ளர் லாய்ட் ஆஸ்டின் வைத்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் 3 ராணுவத்தலங்களில் வடகொரிய வீரர்கள் பயிற்சி பெறுவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.ஒருவேளை ரஷ்யா அவ் வீரர்களை பயன்படுத்தினால் விளைவுகள் மோச மானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு துருக்கி பதில் தாக்குதல் 

துருக்கியில் புதனன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். அந்நாட்டின் ராணுவத்து க்கு தேவையான போர் விமானங்கள், டிரோன்கள் தயாரிக்கப்படும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குத லில் குர்திஷ் இயக்கத்தினரின் தொடர்பிருப்பதாக கூறியுள்ள துருக்கி ராணுவம் இராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பதுங்குக் குழிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

மாணவர் அமைப்புக்கு இடைக்கால அரசு தடை 

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி யின் மாணவர் அமைப்பிற்கு அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. ஹசீனா வின் அரசாங்கத்தை அகற்ற வழிவகுத்த மாணவர் போராட்டம் நடந்த போது ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பு போராட்டத்தில் கலவரத்தை உருவாக்கியது என  குற்றம் சாட்டியது. மேலும் தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவ்வமைப்பை தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.