world

img

ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் : கனடா நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பேச்சு

ஒட்டாவா,அக்.24- ஆர்எஸ்எஸ் அமைப்பை கனடாவில் தடை செய்ய வேண்டும் எனவும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்  எனவும் அந்நாட்டின் எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான வழக்கில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மீது கனடா உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இதனை இந்தியா மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து  தில்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற இந்தியா உத்தரவிட்டது. கனடா அரசும் இந்திய  தூதரக அதிகாரிகள் 6 பேரை கனடாவை விட்டு  வெளியேறுமாறு உத்தரவிட்டது. இந்த சர்ச்சை யில் இந்தியா கனடாவிற்கு இடையிலான உறவு கள் தொடர்ந்து விரிசலடைந்து மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்த மோதல் போக்கை தொடர்ந்து சமீப காலமாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதர வாளர்கள் இந்திய பிரதமர் மோடியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தான் கடந்த திங்களன்று கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த அவசர கூட்டத்தில் தீவிரவாத அமைப்பைப் போல செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கனடா வில்  தடை செய்ய வேண்டும் என எம்பிக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.  சீக்கிய தலைவரும் புதிய ஜனநாயகக் கட்சி யின் (என்டிபி) தலைவருமான ஜக்மீத் சிங் பேசும்போது ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்வதுடன் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  என்டிபி கட்சி எம்.பி. ஹீத்தர் மெக்பெர்சன் பேசியபோது, இந்தியாவுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட  ராணுவத்தளவாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்த வேண்டும். அதோடு சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் செய்கிற, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுத்து வருகிற இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றார்.  அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்  ஆர்எஸ் எஸ் அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை செய்து ஒரு தீவிரவாத அமைப்பு போலவே  செயல்பட்டு வருகிறது.  கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆர்எஸ்எஸ் செயல்படு த்துகிறது. எனவே அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.