tamilnadu

img

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கோவை,அக்டோபர்.23- தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் தங்கள் ஆணையம் சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் இது குறித்து சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சாரங்கன், அரசின் முயற்சியில் மாணவர்களை ஆன்லைன் மோகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது உளவியல் விஷயங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் அவர்களுடன் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்துவதாகத் தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் சூதாட்டம் என்பது படிப்பிற்கும் விளையாட்டு மோகத்திற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்த அவர் சில ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட விளையாட விளையாட விளையாட விளையாட அதற்கு அடிமையாகிறார்கள் எனவும் சாதாரணமாக விளையாடத் துவங்கி இறுதியில் பணத்தை வைத்து விளையாடி பிறகு வேலை படிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டம் இல்லாமல் சென்று விடுவதாகத் தெரிவித்தார். 
மேலும் இது குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆய்வறிக்கை மேலும் தங்கள் முயற்சிக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார். ஆன்லைன் விளையாட்டு வெப்சைடுகள் பலதும் விதிமுறை இன்றி செயல்படுவதாகவும் வெளிநாடுகளிலிருந்து அந்த வெப்சைடுகள் இங்கு பேட்ச் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இது போன்ற வெப்சைடுகளை கண்டுபிடிக்கக் கண்டுபிடிக்க அதனைத் தடை செய்து வருவதாகவும் கூறினார். குழந்தைகள் விளையாடுகின்ற சில விளையாட்டுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.