world

img

பாகிஸ்தானில் இருந்து கடிதம் மற்றும் இறக்குமதிக்கு தடை!

புதுதில்லி,மே.03- பாகிஸ்தானிலிருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பகல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாகப் பாதுகாப்பு கருதி இந்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது.
இந்நிலையில் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி பாகிஸ்தானிலிருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத்  தடை விதித்தும், கடிதம் மற்றும் பார்சல்களுக்கு தடை விதித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது