world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இந்தோனேசிய நிலச்சரிவு:  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை  27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது எனவும் தற்போது அப்பேருந்தை  இந்தோனேசிய மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் முதல்   பெய்து வரும் மழையில் நான்கு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது. 

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் தலிபான் ஆட்சியில் அதிகரிப்பு 

ஆப்கனில் பத்திரிகையாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், சித்ரவதைகள், அத்து மீறல்கள் அதிகரித்துள்ளதாக அந் நாட்டில் உள்ள ஐ.நா உதவிக்குழு தெரிவித்துள் ளது.   2021 இல் தலிபான்களிடம் அமெரிக்க ராணுவம் ஆட்சியைக் கொடுத்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் வரை 336 பத்திரிகையாளர் கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தலிபான் அர சால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை ஐ.நா. தெரி வித்துள்ளது. இதில் 256 பேர் எந்த வித ஆவ ணங்களும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீ விபத்து மாசுபாட்டால்  15 லட்சம் பேர் பலி 

காட்டுத் தீ, செயற்கை தீ விபத்து உள்ளிட் டவற்றின்  காரணமாக ஏற்படும் காற்று மாசுபாடுகளினால் ஆண்டுக்கு 15 லட்சம் மக்கள் பலியாகியுள்ளதாக தி லான்செட் ஆய்வு இதழின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. தீ விபத்து காற்று மாசால் 2000-2019 வரை 4.5 லட்சம் மக்கள் இதய நோய் ஏற்பட்டு இறந்துள்ளனர். 2.5 லட்சம் பேர் சுவாச பிரச்சனையால் இறந்துள்ளனர். இந்த இறப்புகளில் 90 சதவீதம் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தான் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரிய வரலாற்றில் மிக கடுமையான பனிப்பொழிவு

தென் கொரியாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு நாட்களாக  கடுமையான பனிப்பொழிவு  (40 செமீ) நிலவி வருகிறது. அந்நாட்டில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான சேவை, போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

டொனால்டு டிரம்ப் உடன்  மார்க் ஜூக்கர்பெர்க் சந்திப்பு 

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள  டொ னால்டு டிரம்ப்பை மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் புளோரிடாவில் சந்தித்துள்ளார். அனை த்து தொழில் நிறுவன தலைவர்களும் டிரம்ப்பின் பொரு ளாதார திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவே மார்க் ஸூகர்பெர்க்கும்  தனது ஆதரவை இச்சந்திப் பின் மூலம்  தெரிவித்தார் என வெள்ளை மாளிகை  துணை தலைமை அதிகாரியாக செயல்பட உள்ள ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கு முன்பு வரை  ஸூகர்பெர்க்  அவ ருக்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.