world

img

பிரான்ஸ் தேர்தல்-இன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு ஞாயிறன்று நடைபெறுகிறது.

முதல் சுற்றில் மொத்தமுள்ள 577 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு மட்டுமே உறுப்பினர்கள் தேர்வாகினர். முதல் சுற்றில் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுபவர் மட்டுமே அப்போதே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இடதுசாரிக் கூட்டணி சார்பில் 4 பேரும், ஆளும் கூட்டணி சார்பில் ஒருவரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்கள். மற்ற தொகுதிகளில் வெற்றி பெறுபவரைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்று வாக்குப்பதிவிலும் கிட்டத்தட்ட பாதிப்பேர் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இடதுசாரிகள் எழுச்சி, வலதுசாரிகள் ஒருங்கிணைப்பு என்று தேர்தல் களைகட்டியுள்ளது.