பாராலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 17-ஆவது பாராலிம்பிக் தொடரில் இந்தியா்கள் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், 10ஆவது நாளான இன்று ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டி டி64 பிரிவில், இந்திய வீரர் பிரவீன் குமார் பங்கேற்றார். இவர் இலக்கை விட கூடுதலாக, அதாவது 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
2021இல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இம்முறை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தற்போதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உள்பட 26 பதக்கங்களை இந்தியா வென்று பதக்கப்பட்டியலில் 14 ஆவது இடத்தில் உள்ளது.