world

img

காலத்தை வென்றவர்கள்... ஜூலியஸ் பூசிக் நினைவு நாள்....

செக்கோஸ்லேவேகியாவில் உதித்த ஜூலியஸ் பூசிக் தமது 12ஆம் வயதிலேயேஇலக்கியங்களைப் படைத்தவர். செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் பணியாற்றியவர். பத்திரிகையாளராகவும் போராளியாகவும் திகழ்ந்த பன்முகத் தன்மை வாய்ந்தவர்.1929 ஆம் ஆண்டு நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் எதிர்ப்பு முன்னணியில் முனைமுகத்து நின்றவர். அவரது வீரம்மிக்க செயல்பாடுகளால் கொதித்த நாஜிகள் 1942ஆம் ஆண்டில் ஜூலியஸ் பூசிக்கைச் சிறையில்அடைத்தனர். சிறையிலிருந்தபோதே ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ எனும்உலகப் புகழ் வாய்ந்த நூலை எழுதினார். சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட போதிலும் மனந்தளராது துணிவுடன் எதிர்கொண்ட மகத்தான கம்யூனிஸ்ட்டாக விளங்கினார். 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். 

“கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. லாபம், லாபம், மீண்டும் லாபம்! இதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அமைப்பு, மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற ஒரு அமைப்பு மனிதத்தன்மை அற்றதாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு, ஒரு கம்யூனிஸ்டுக்கு, மக்களின் மனிதத் தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது, சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை. எனவேதான், நிறைவும் சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில், தங்கள் முழு வலிமையை பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோகம்யூனிஸ்டுகள் பின் வாங்குவதில்லை!”அவரின் கூற்றுப்படி சிறந்த கம்யூனிஸ்டாகத் திகழ்வதைவிட கம்யூனிஸ்டுகளுக்கு வேறென்ன உயர்வைக் கொடுக்கும்?

- பெரணமல்லூர் சேகரன்