சூயஸ் கால்வாயில் குறுக்கே சிக்கி கொண்ட கப்பல் தற்போது மிதக்க தொடங்கியுள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் மற்றும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையாக உள்ளது. இந்த கால்வாய் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உலக அளவு வணிகத்தில் கப்பல் போக்குவரத்து 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது.
இந்நிலையில், சுமார் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட மிக பெரிய கப்பலான எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்றது. கடந்த செவ்வாய் கிழமை சூயஸ் கால்வாய் வழியாக கப்பல் செல்லும் போது , இரண்டு பக்க கரைகளிலும் போதி சிக்கிக் கொண்டது.
இதனை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு அவ்வழியாக எந்த கப்பல்களும் செல்ல முடியாமல் நடுக்கடலில் நின்றது. இதனால் சர்வதேச வணிகம் பெரிது பாதிக்கப்பட்டு, ஒரு நாளில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி சரக்குகள் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த 5 நாட்களாக கப்பலை மிதக்க வைக்க பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது.
தற்போது சூயஸ் கால்வாயில் குறுக்கே சிக்கி கொண்ட கப்பல் மிதக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது