மும்பை:
கட்சி மாறிய சந்தர்ப்பவாதிகளால் நிரம்பி வழியும் ‘பாஜக கப்பல்’ விரைவிலேயே மூழ்கும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில், எதிர்க்கட்சி யைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை, குதிரை பேரம் மூலமாக, பாஜக தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.கே. பாட்டீல் (காங்கிரஸ்) என்பவரை, தங்கள் பக்கம் இழுத்த பாஜக, அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கியது. இதனால்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்களும் பாஜக-வுக்கு தாவியுள்ளனர்.இதையொட்டியே, பாஜக-வின் நட வடிக்கையை, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ்முன்னாள் தலைவர் அசோக் சவான் கடுமையாக விமர்சித்துள்ளார். “நிரம்பி வழியும் கப்பல் என்னவாகும்.. மூழ்கிவிடும். அதுபோலத்தான் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை இழுத்துக்கொள் ளும் பாஜக-வில், சந்தர்ப்பவாதிகள் நிரம்பி வழிகிறார்கள். இதனால் அந்தக் கப்பல் மூழ்கி விடும். இது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.“சந்தர்ப்பவாதிகள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதால் காங்கிரசில் காலியிடம் ஏற்பட்டு உள்ளது. இதில் புதியவர்கள் மற்றும் திறமை வாய்ந்தவர்கள் நிரப்பப்படு வார்கள்” என்றும் சவான் கூறியுள்ளார்.